முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொடைக்கானல் மலைப்பகுதி கிராமத்திற்கு சூரியசக்தி தெரு விளக்கு வசதி

செவ்வாய்க்கிழமை, 20 ஜூன் 2017      திண்டுக்கல்
Image Unavailable

கொடைக்கானல்-
 கொடைக்கானல் மலைப்பகுதி கிராமத்திற்கு சூரிய சக்தி தெரு விளக்கு வசதி ரோட்டரி சங்கம் சார்பில் செய்து தரப்பட்டது.
 கொடைக்கானல் நகராட்சி பகுதியை சேர்ந்தது கே.பி.எம். பாறை பகுதி இப் பகுதியில் சுமார் 50 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நகரப் பகுதியினை சேர்ந்ததாக இருந்தாலும் இந்த பகுதியில் தெரு விளக்கு வசதிகள் இதுவரை இல்லை இந்த பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று கொடைக்கானல் ரோட்டரி சங்கம் சார்பில் சூரியசக்தி தெரு விளக்கு வசதி செய்யப்பட்டது இந்த தெரு விளக்கு வசதி சுமார் 1 லட்சம் ரூபாய் செலவில் செய்யப்பட்டது.
 இந்த சூரிய சக்தி தெரு விளக்கின் துவக்க நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்க முன்னாள் ஆளுநர் கொடைக்கானல் செயின்ட் பீட்டர்ஸ் பள்ளியின் தாளாளர் சாம்பாபு தலைமையில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு கொடைக்கானல் ரோட்டரி சங்கத் தலைவர் டாக்டர் ராமன் ராஜ்குமார் முன்னிலை வகித்து வரவேற்றார். கொடைக்கானல் ரோட்டரி சங்கத்தின் 2017-18ம் ஆண்டிற்கான தலைவர் ரோகன் சாம்பாபு, ரோட்டரி சங்க நிர்வாகிகள் ஆகாஸ் பில்டர்ஸ் நிர்வாக இயக்குநர் ஸ்ரீதர், சன்னி ஜேக்கப், கார்த்திகேயன், கொடைக்கானல் வானியல் ஆராய்ச்சி மைய விஞ்ஞானி குமரவேல், மீரா ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சூரிய சக்தி தெருவிளக்கினை இப்பகுதி மக்களுக்கு அர்ப்பணித்து முன்னாள் ஆளுநர் சாம்பாபு அவற்றை இயக்கி வைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து