முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கையில் சுற்றுப்பயணம்: இந்திய அணி பங்கேற்கும் போட்டி அட்டவணை அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 20 ஜூன் 2017      விளையாட்டு
Image Unavailable

கொழும்பு : இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணி பங்கேற்கும் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

5 ஒருநாள் போட்டி ...

சாம்பியன் டிராபி தொடர் முடிந்த கையுடன் இந்திய அணி, மேற்கிந்திய தீவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5-ஒரு நாள் போட்டி மற்றும் ஒரு டி-20 தொடரில் விளையாடவுள்ளது. இத்தொடர் வரும் 23-ஆம் தேதி தொடங்கவுள்ளது. இத்தொடர் முடிந்தவுடன் இந்திய அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடுகிறது. இலங்கை செல்லும் இந்திய அணி 3 டெஸ்ட், 5-ஒரு நாள் போட்டி மற்றும் ஒரு 20 ஓவர் போட்டி என விளையாடவுள்ளது, இத்தொடருக்கு முன்னர் இந்திய அணி, இலங்கை அணியுடன் இரண்டு பயிற்சி ஆட்டங்களில் மோதுகிறது.

டெஸ்ட் போட்டிகள் ...

அப்போட்டி கொழும்புவில் ஜூலை 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் நடைபெறும். பயிற்சி போட்டிக்கு பின்னர் இத்தொடர் ஜூலை 26-ஆம் தேதி துவங்கி, செப்டம்பர் 6-ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் போட்டிகள் கண்டி, காலி மற்றும் கொழும்புவிலும், ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டிகள் கொழும்பு, தம்புல்லா மற்றும் பல்லேகல ஆகிய இடங்களில் உள்ள மைதானங்களில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டி அட்டவணை

எண்  தேதி    போட்டி  நேரம் (IST)

1 புதன், 26 ஜூலை டெஸ்ட்  10:00:00

2 வெள்ளி 4 ஆகஸ்ட் டெஸ்ட்  10:00:00

3 சனி, 12 ஆகஸ்ட் டெஸ்ட்  10:00:00

4 ஞாயிறு, 20 ஆகஸ்ட் ஒரு நாள்  14:30:00

5 செவ்வாய், 24 ஆகஸ்ட் ஒரு நாள் 14:30:00

6 ஞாயிறு, 27 ஆகஸ்ட்   ஒரு நாள்  14:30:00

7 புதன், 30 ஆகஸ்ட்  ஒரு நாள்  14:30:00

8 ஞாயிறு, 3 செப்டம்பர் ஒரு நாள் 14:30:00

9 புதன், 6 செப்டம்பர் டி-20   19:00:00

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து