முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கும்ப்ளேவின் பதவியை நீட்டிப்பதில் கோலிக்கு முக்கிய பங்கு இருக்கும் - பி.சி.சி.ஐ

செவ்வாய்க்கிழமை, 20 ஜூன் 2017      விளையாட்டு
Image Unavailable

மும்பை : கும்ப்ளேவை இந்தியாவின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கும் முடிவில் விராட் கோலிக்கு முக்கிய பங்கு இருக்கும் என நிர்வாகக்குழு தெரிவித்துள்ளது.

கருத்து வேறுபாடு

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த அனில் கும்ப்ளேயின் பதவிக்காலம் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடருடன் முடிவடைந்தது. அவரது பதவிக்காலம் மேலும் ஓராண்டு நீடிக்கப்படலாம் என்ற செய்து வெளியானது. அப்போதுதான் விராட் கோலிக்கும், கும்ப்ளேவிற்கும் இடையில் மோதல் இருப்பதாக செய்தி வெளியானது. இதனால் கும்ப்ளேவை பயிற்சியாளராக்க பி.சி.சி.ஐ யோசித்து வருகிறது.

கோலி சம்மதம் அவசியம்

கங்குலி, சச்சின், லஷ்மண் ஆகியோரை கொண்ட கிரிக்கெட் ஆலோசனைக் குழுவும் புதிய பயிற்சியாளரை தேர்ந்தெடுக்காமல் இருக்கிறது. இதற்கிடையே வெஸ்ட் இண்டீஸ் தொடர் வரை அனில் கும்ப்ளே பயிற்சியாளராக இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின் புதிய பயிற்சியாளரா? அல்லது கும்ப்ளேயின் பதவியை நீடிக்கப் போகிறார்களா? என்ற எதிர்பார்ப்பு கிளம்பி வருகிறது. விராட் கோலி சம்மதம் இருந்தால் மட்டுமே அனில் கும்ப்ளேயின் பதவி நீட்டிக்கப்படும் என்று பொதுவாக கருதப்பட்டது. இந்நிலையில் பி.சி.சி.ஐ-யின் நிர்வாகக்குழுவும் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளது.

எந்த பங்கும் இல்லை

இதுகுறித்து நிர்வாகக்குழு சார்பில் கூறப்படுவதாக வெளிவந்துள்ள செய்தியில், ‘‘இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர் அல்லது கும்ப்ளேயின் பதவி காலத்தை நீட்டிப்பதில் எங்களுக்கு எந்த பங்கும் இல்லை. ஆனால், கும்ப்ளேயின் பதவிக்காலத்தை நீட்டித்தால், விராட் கோலிக்கும், அவருக்கும் இடையிலான உறவு சுமுகமாக செல்ல வேண்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு மாற்றாக சூழ்நிலை வேறுமாதிரி சென்றால், கேப்டன் சொல்வதை ஏற்றுக் கொள்வதா?, பயிற்சியாளர் சொல்வதை ஏற்றுக் கொள்வதா? என்ற குழப்பம் வீரர்களிடையே அதிகரித்து விடும். இதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

விரைவில் முடிவு

கிரிக்கெட் ஆலோசனைக் குழுவில் ஜாம்பவான்கள் சச்சின் தெண்டுல்கர், லஷ்மண் மற்றும் கங்குலி ஆகியோர் உள்ளனர். இவர்கள் இந்திய அணியின் வளர்ச்சியை கணக்கில் கொண்டுதான் முடிவு எடுப்பார்கள். இவர்களுடன் பி.சி.சி.ஐ-யின் சிஇஓ ராகுல் ஜோரியும் உள்ளார். பயிற்சியாளர் விவகாரம் விரைவில் முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்று கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து