முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி-20 குளோபல் லீக்’: கேப்டவுன் அணியை வாங்கினார் ஷாருக்கான்

செவ்வாய்க்கிழமை, 20 ஜூன் 2017      விளையாட்டு
Image Unavailable

மும்பை : தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்பட இருக்கும் 'டி20 குளோபல் லீக்' தொடருக்கான கேப்டவுன் அணியை இந்தி நடிகர் ஷாருக்கான் வாங்கி உள்ளார்.

ஜோகன்ஸ்பாக் அணி

தென்னாப்பிரிக்காவில் உலக அளவிலான டி-20 கிரிக்கெட் ‘லீக்’ போட்டி நடைபெறுகிறது. இதன் ஒரு அணியை நடிகர் ஷாருக்கான் வாங்கியுள்ளார். ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் உரிமையாளரான அவர் கேப்டவுன் அணியை வாங்கியுள்ளார். இந்த அணியில் நட்சத்திர வீரரான டுமினி உள்ளார். இதேபோல டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் உரிமையாளரான ஜி.எம்.ஆர். ஸ்போர்ட்ஸ் ஜோகன்ஸ்பாக் அணியை வாங்கியுள்ளது. இதன் நட்சத்திர வீரராக ரபடா உள்ளார்.

நட்சத்திர வீரர்கள்

இதேபோல பாகிஸ்தான் பிரிமீயர் ‘லீக்’ அணியை வாங்கிய 2 பேர் தென்னாப்பிரிக்க தொழில் அதிபர்கள். 2 பேர் மற்ற அணிகளை வாங்கியுள்ளனர். டிவில்லியர்ஸ் பிரிடோரியா அணிக்கும், ஹசிம் அம்லா டர்பன் அணிக்கும், குயின்டன் டிகாக் பெரோனி அணிக்கும், டேவிட் மில்லர் புளோயம் பாண்டின் அணிக்கும், இம்ரான் தாகீர் போர்ட்ஸ் எலிசபெத் அணிக்கும் நட்சத்திர வீரர்களாக உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து