முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேவிபட்டிணம் அருகே 600 கிலோ கடல்அட்டை பறிமுதல்-வாலிபர் கைது

புதன்கிழமை, 21 ஜூன் 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,-ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டிணம் அருகே 600 கிலோ கடல் அட்டைகளுடன் வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரின் கார் பறிமுதல் செய்யப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டிணம் கடலோர பகுதி வழியாக கடல்அட்டை கடத்தி வருவதாக கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து தேவிபட்டிணம் கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜராஜன், சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், தலைமை காவலர்கள் இளையராஜா, திருமுருகன் உள்ளிட்டோர் அந்த பகுதிக்கு சென்று ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அதிகாலை 5 மணி அளவில் தேவிபட்டிணம் சம்பை கடற்கரை பகுதியில் வேகமாக வந்த ஆம்னி காரை மடக்கி நிறுத்த முயன்றனர். போலீசாரை கண்டதும் காரை திருப்பி கொண்டு தப்பி முயன்றபோது போலீசார் விரட்டி சென்று மடக்கி பிடித்து சோதனையிட்டனர்.

அந்த காரில் ஏராளமான சாக்கு பைகளிலும், பிளாஸ்டிக் பேரல்களிலம் சுமார் 600 கிலோ கடல்அட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன்மதிப்பு சுமார் ரூ.5 லட்சம் ஆகும். இதுகுறித்து விசாரித்தபோது காரில் வந்த நபர் தேவிபட்டிணம் வடக்குத்தெருவை சேர்ந்த அயூப்கான் மகன் முகம்மதுநகீம்(வயது23) என்பது தெரிந்தது. இவர் தேவிபட்டிணம் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் மீனவர்களின் வலைகளில் சிக்கும் கடல்அட்டைகளை சிறுகசிறுக வாங்கி மொத்தமாக சேர்த்து கொண்டு வந்து அதனை பதப்படுத்தி தூத்துக்குடி வழியாக வெளிநாடுகளுக்கு கடத்தி செல்ல திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து கடல் அட்டைகளையும், அதனை கொண்டு வந்த ஆம்னி காரினையும் பறிமுதல்செய்த போலீசார் வாலிபர் முகம்மது நகீமை பிடித்து வந்து ராமநாதபுரம் வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர். ராமநாதபுரம் வனத்துறையினர் கடல்அட்டை கடத்தல் குறித்து முகம்மது நகீமிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து