முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமநாதபுரத்தில் சர்வதேச யோகாதினம் கலெக்டர் முனைவர் நடராஜன் தொடங்கி வைத்தார்

புதன்கிழமை, 21 ஜூன் 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,-ராமநாதபுரத்தில் சர்வதேச யோகாதினத்தையொட்டி யோகா பயிற்சியினை கலெக்டர்முனைவர் நடராஜன் தொடங்கி வைத்தார்.
 ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டரங்கில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நேரு யுவகேந்திரா மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆகியவற்றின் சார்பாக நடைபெற்ற யோகா பயிற்சியினை மாவட்ட கலெக்டர்  முனைவர்.ச.நடராஜன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:- மனிதனின் ஆரோக்கியத்தை காத்திடும் விதமாக உலகமெங்கும் யோகா தினம் ஜூன் 21-ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. யோகா என்பது உடல், மனம், ஆன்மாவின் ஒருங்கிணைந்த இயலாகும். உடலையும், மனதையும் ஒருங்கிணைத்து வாழ்நாளை நீட்டிக்க வழிவகை செய்கின்றது. யோகா உடல், மன நோய்களை நீக்கி உடலுக்கு ஆரோக்கியத்தை தருகின்றது. மனதையும், உடலையும் ஒருநிலைப்படுத்துவதன் மூலம் மனதிற்கு அமைதி கிடைப்பதோடு உடலிற்கு புத்துணர்வும் ஏற்படுகின்றது.  இன்றைய சூழ்நிலையில் யோகா என்பது அனைவருக்கும் தேவையான ஒன்றாக கருதப்படுகிறது.  யோகாவில் பலவகைகள் உள்ளன.  குடும்பத்தில் உள்ளவர்கள், அலுவலகத்தில் பணிபுரிபவர்கள், பள்ளி, கல்லூரி மாணவச் செல்வங்கள் அனைவரும் தங்களின் உடல்நிலைக்கேற்ப  தினமும் யோகா எடுத்துக் கொள்வது மிக மிக அவசியம்.  நோய்களிலிருந்து ஒவ்வொரு மனிதனும் தன்னை காத்துக் கொள்ள குறைந்தது அரை மணி நேரமாவது மனதை ஒருநிலைப்படுத்தி யோகா பண்ணுவது மிகவும் இன்றியமையாததாகும்.  ஆகையால் தொடர்ந்து இன்றிலிருந்து ஒவ்வொருவரும் யோகாசனங்கள் மேற்கொண்டு ஆரோக்கியமான வாழ்விற்கு வழிவகை செய்திட அனைவரும் முன்வர வேண்டும். இவ்வாறு பேசினார்.
   நிகழ்ச்சியில், மனவளக் கலைமன்ற யோகா வல்லுநர் பேராசிரியர்.ஆர்.முருகேசன் யோகா பயிற்சி அளித்தார். இதில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம் பிரகாஷ் மீனர், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எஸ்.எஸ்.தனபதி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ.அண்ணாதுரை, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அலுவலர் பிராங் பால் ஜெயசீலன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வசந்தி நேருயுவகேந்திராவை சார்ந்த சதீஷ் உள்பட பள்ளி , கல்லூரி  மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். இதன்பின்னர் கேணிக்கரை இணை இயக்குநர் (நலப்பணிகள்) அலுவலகத்தில் நடைபெற்ற அரசு பெண்கள் கலைக்கல்லூரி மாணவியர்கள் பங்றே;ற யோகா பயிற்சியினை  மாவட்ட கலெக்டர் முனைவர்.ச.நடராஜன் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில்  இணை இயக்குநர் (நலப்பணிகள்) டாக்டர்.ராஜா குணசீலன், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர்.பார்த்தீபன், மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர்.கருப்பசாமி, உள்ளுரை மருத்துவ அலுவலர் டாக்டர்.விநாயகமூர்த்தி, இயற்கை மருத்துவர் டாக்டர்.ஷர்மிளா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து