முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இஸ்லாமிய கொள்கைகளுக்கு முரணானது: சும்பா நடனத்தை தடை செய்த ஈரான்

புதன்கிழமை, 21 ஜூன் 2017      உலகம்
Image Unavailable

டெகரான், ஈரானில் உடற்பயிற்சி நடனமான சும்பா நடனம் இஸ்லாமிய சித்தாந்தத்திலிருந்து முரண்படுகிறது என்று கூறி ஈரான் நாடு தடைச் செய்துள்ளது.

எளிமையான உடற்பயிற்சியுடன் ஏரோபிக்ஸ் இணைந்து ஆடப்படும் கொலம்பியாவின் நடனம்தான் சும்பா. பெரும்பாலும் சும்பா நடனம் பெண்களால் அதிகளவில் ஆடப்படுகின்றது. உடல் எடையை குறைப்பதற்காக ஆடப்படும் இந்த நடனம் மன அழுத்தத்தை குறைப்பதற்காக ஆண்களாலும் பயிலப்பட்டு வருகிறது.
உலக அளவில் பிரபலமாக உள்ள சும்பா நடனம் இஸ்லாமிய சித்தாந்தத்துக்கு முரணாக உள்ளது என்று ஈரான் அதனை தடை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து ஈரான் விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் தலைவர் அலி மஜ்தாரா அந்நாட்டின் இளைஞர் நலத்துறை அமைச்சருக்கு கடிதம் ஒன்று அனுப்பியுள்ளதாக அ ந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து