முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் விசா ஓராண்டு காலம் நீட்டிப்பு

புதன்கிழமை, 21 ஜூன் 2017      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி  வங்கதேசத்தைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன், முஸ்லிம் அடிப்படைவாதம் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களை அவரது புத்தகங்களில் வெளியிட்டார். இதனால் முஸ்லிம் அடிப்படைவாதிகள் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததை அடுத்து, கடந்த 1994-ம் ஆண்டு இந்தியாவுக்குத் தப்பி வந்தார்.

கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்கா, ஐரோப்பா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் வாழ்ந்து வரும் அவர், குறிப்பாக மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் வசிப்பதையே பெரிதும் விரும்புவார். சுவீடன் குடியுரிமை பெற்ற தஸ்லிமா, கடந்த 2004-ம் ஆண்டு முதல் இந்தியாவில் வசிக்க விசா பெற்றார்.
இந்நிலையில், அவரது விசா காலம் வரும் ஜூலை 22-ம் தேதியுடன் முடிகிறது.  இந்நிலையில் அவரது விசா காலத்தை ஒரு ஆண்டுக்கு மேலும் நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து