முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.சி.சி சாம்பியன் இறுதிப் போட்டியில் வென்ற பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கம்; ம.பி., கர்நாடகாவில் 19 பேர் கைது

புதன்கிழமை, 21 ஜூன் 2017      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி, ஐசிசி சாம்பியன் டிராபி இறுதிப் போட்டியில் இந்திய அணி தோற்றதை அடுத்து, பாகிஸ்தா னுக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பிய 19 பேர் கைது செய்யப் பட்டனர்.

லண்டனில் நடைபெற்ற ஐசிசி சாம்பியன் டிராபி கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இது இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம் புர்கான்பூரில் உள்ள மொகத் நகரப் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சிலர் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றதை பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். மேலும் பாகிஸ் தானுக்கு ஆதரவாகவும், இந்தியா வுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பியுள்ளனர். இதையடுத்து அங்கு சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் தவிர்க்க போலீஸார் குவிக்கப்பட்ட னர். இதுதொடர்பாக சுபாஷ் லக்ஷ்மன் கோலி அளித்த புகாரின் பேரில், குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட 15 பேரை ஷாபூர் காவல் நிலையப் போலீஸார் கைது செய்தனர்.

இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப் பட்டதை அடுத்து, 15 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உள்ள சுன்டிகொப் பாவைச் சேர்ந்த ரியாஸ் (21), ஜாஹூன் (24), அப்துல் சமான் (23) மற்றும் ஹாவேரி மாவட்டத்தைச் சேர்ந்த ஷபீர் அகமது (35) ஆகியோர் பாகிஸ்தான் வெற்றியைப் பட்டாசு வெடித்துக் கொண்டாடியதாகக் கைது செய்யப்பட்டனர். இதற்கு இஸ்லாமிய அமைப்புகளும், முற் போக்கு சிந்தனையாளர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து