முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகத்திற்கு இந்தியா அளித்த நன்கொடை யோகா,: மோடி

புதன்கிழமை, 21 ஜூன் 2017      இந்தியா
Image Unavailable

லக்னோ, யோகா பயிற்சியை உலகத்திற்கு இந்தியா நன்கொடையாக அளித்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதமாகக் கூறினார்.

உலகம் முழுவதும் நேற்று யோகா தினம் அனுஷ்டிக்கப்பட்டது. பல்வேறு நாடுகளில் நடந்த யோகா நிகழ்ச்சிகளில் கோடிக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.  இந்தியாவிலும் யோகா தினம் நேற்று பிரமாண்டமான முறையில் அனுஷ்டிக்கப்பட்டது. தலைநகர் டெல்லியில் யோகா பயிற்சியை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தொடங்கிவைத்தார். அந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார்.

மேலும் தலைநகரின் பல பகுதிகளில் யோகா நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் மத்திய அமைச்சர்கள் வெங்கய்யா நாயுடு உள்பட பல முக்கிய தலைவர்களும் கலந்துகொண்டனர்.  அதனையடுத்து உத்தரப்பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் உள்ள ரமாபாய் அம்பேத்கர் மைதானத்தில் சர்வதேச யோகா தின விழா நேற்று பிரமாண்டமான வகையில்  கொண்டாடப்பட்டது. இந்த யோகா நிகழ்ச்சியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். பிரதமர் நரேந்திர மோடியும் வெள்ளை நிற டி சட்டையும் அணிந்துகொண்டு யோகா பயிற்சி செய்தார்.  முன்னதாக யோகா நிகழ்ச்சியை தொடங்கிவைத்து அவர் பேசினார். அப்போது அவர் கூறுகையில் உலகிற்கு யோகாவை இந்தியா கொடையாக அளித்துள்ளது என்றார்.

மேலும் இந்தியாவுடன் உலகத்தை யோகா இணைத்துள்ளது. யோயகா, இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருங்கிணைந்த ஒரு பகுதியாகும். இந்தியர்களின் மொழி மற்றும் கலாசாரத்தை உலகில் உள்ள பல நாடுகள் இன்னும் அறிந்துகொள்ளாமல் இருக்கின்றன. அதேசமயத்தில் உலக அளவில் யோகா புகழ் பெற்றுள்ளது. கடந்த பல ஆண்டுகளாக நாட்டில்  பல பள்ளிகள் யோகா வகுப்பை தொடங்கியுள்ளன. இதற்காக நான் பெருமைப்படுகிறேன். அதனால் யோகா ஆசிரியர்கள் தேவை அதிகரித்துள்ளது. இந்திய யோகா ஆசிரியர்களுக்கு உலகம் முழுவதும் பெரும் வரவேற்பும் மதிப்பும் கிடைத்து வருகிறது. உலகிற்கு யோகாவை இந்தியா நன்கொடையாக வழங்கியுள்ளது. நாளுக்கு நாள் ஒவ்வொருவரின் வாழ்விலும் ஒரு அங்கமாக மாறி வருகிறது. உடல் ஆரோக்கியத்திற்கு யோகா பயிற்சி அவசியம். யோகா செய்வது நமது நிலைக்கு எந்த செலவும் செய்யாமல் காப்பீடு செய்வது போன்றதாகும். யோக உடல் ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் கொடுக்கிறது. அதனால் யோகா கற்றுக்கொள்ள இந்தியர்களை வெளிநாட்டினர் எதிர்பார்க்கின்றனர். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

இந்தநிகழ்ச்சியில் உத்தரப்பிரதேச மாநில கவர்னர் ராம்நாயக், முதல்வர் யோகி ஆதித்யா நாத் உள்பட பல முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

சர்வதேச யோகா தினம் ஆண்டுதோறும் ஜூன் 21-ம் தேதி கடை பிடிக்கப்படும் என்று ஐக்கிய நாடுகள் சபை கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11-ம் தேதி  அறிவித்தது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ம் தேதி யோகா தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளாக யோகா தினம் கொண்டாடப்படுகிறது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து