முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொட்டும் மழையில் லக்னோவில் பிரதமர் மோடி யோகாவில் பங்கேற்பு : ஆயிரக்கணக்கான மக்களும் பங்கேற்றனர்

புதன்கிழமை, 21 ஜூன் 2017      இந்தியா
Image Unavailable

Source: provided

லக்னோ : சர்வதேச யோகா தினமான  நேற்று நாடு முழுவதும் சுமார் 5 ஆயிரம் இடங்களில் யோகா பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன . உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற  விழாவில் 55,000 பேர் மழையை பொருட்படுத்தாமல் கலந்து கொண்டு யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.

ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐக்கிய நாடுகள் சபை கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அறிவித்தது. இதையடுத்து கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் 21-ம் தேதி முதல்முறையாக சர்வதேச யோகா தினம் புதுடெல்லி ராஜபாதையில் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது.

பல்வேறு ஆசனங்கள்

அதில் பிரதமர் மோடி பங்கேற்று பல்வேறு ஆசனங்களைச் செய்து விழாவைச் சிறப்பித்தார். இதில் இந்தியா உட்பட 84 நாடுகளைச் சேர்ந்த 35,985 பேர் கலந்து கொண்டதால், கின்னஸ் சாதனை புத்தகத்தில் இந்நிகழ்வு இடம் பெற்றது. இதேபோல் கடந்த ஆண்டு பிரதான யோகா நிகழ்ச்சி சண்டிகரில் நடைபெற்றது.

இந்நிலையில், 3-வது சர்வதேச யோகா தினம் நேற்று நாடு முழுவதும் 5 ஆயிரம் இடங்களில் கொண்டாடப்பட்டது. உத்தர பிரதேச தலைநகர் லக்னோ வில் உள்ள ராமாபாய் அம்பேத்கர் மைதானத்தில் நடைபெற்ற பிரதான நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். காலை 6 மணிக்குத் தொடங்கிய  விழாவில்  அவருடன் 55,000 பேர் கலந்து கொண்டு பல்வேறு ஆசனங்களைச் செய்தனர்.

 முன்னதாக நேற்று முன்தினம் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆளுநர் ராம் நாயக் ஆகியோர் பார்வையிட்ட னர். பிரதமர் மோடியுடன் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோரும் யோகா பயிற்சி மேற்கொண்ட னர்.

ஒருமாதம் ஒத்திகை

முன்னதாக இதற்கான ஒத்திகை நிகழ்ச்சி ஒரு மாதம் நடைபெற்றது. பள்ளி மாணவ, மாணவிகள், தொண்டு நிறுவனங் களைச் சேர்ந்தவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த ஏராளமானோர் பயிற்சி மேற்கொண்டனர்.

நேற்று விழா நடைபெற்றதை அடுத்து, மைதானத்துக்கு உள்ளேயும், வெளியேயும் பாது காப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. கமாண்டோ அதிரடிப் படையினரும், துணை ராணுவப் படை வீரர்களும் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

பல்வேறு மாநிலங்களில் நடை பெறும் நிகழ்ச்சிகளில் யோகா கலையில் தேசிய மற்றும் சர்வதேச அளவில் சிறந்து விளங்குவோருக்கு ‘பிரதமர் விருது’ வழங்கப்படும்.

இந்தியா தவிர 150 நாடுகளிலும் சர்வதேச யோகா தின நிகழ்ச்சிகள் நடைபெற்றன. குறிப்பாக அமெரிக்காவில் நியூயார்க்கில் உள்ள சென்ட்ரல் பூங்கா, பிரான்ஸில் பாரிசில் உள்ள ஈபிள் டவர், பிரிட்டன் தலைநகர் லண்டனில் டிராபல்கர் சதுக்கம் உள்ளிட்ட இடங்களில் யோகா தினம் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

யோகா தினத்தின் முன்னோட்ட மாக பூடான், ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து, சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் நடைபெற்ற யோகா பயிற்சி படங்களை பிரதமர் மோடி தனது ‘ட்விட்டர்’ பக்கத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து