முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா பயிற்சி: கலெக்டர் துவக்கிவைத்து பங்கேற்றார்

புதன்கிழமை, 21 ஜூன் 2017      திருவண்ணாமலை
Image Unavailable

திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டரங்கில் 3வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நடைபெற்ற யோகா பயிற்சியை கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே துவக்கிவைத்து பங்கேற்றார்.

யோகா பயிற்சி

திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டரங்கில் தி.மலை சாய்சேவா யோகா இயற்கை மருத்துவமனை மற்றும் புதுடில்லி ஆயுஸ் அமைச்சகம் இணைந்து 3வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நேற்று யோகா பயிற்சியை நடத்தியது.இந்த பயிற்சி முகாமிற்கு மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தலைமையேற்று பயிற்சியை துவக்கிவைத்து யோகாசனத்தில் கலந்து கொண்டார். இதில் காவல்துறை மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இந்த பயிற்சி முகாமில் சாய்சேவா யோகா இயற்கை மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைமை மருத்துவர் டாக்டர் ப.எழில்மாறன், ஆசனங்கள், பிரணாயமம், சூரியநமஸ்காரம் போன்ற பல்வேறு யோகாசன பயிற்சியினை வழங்கினார்.

இந்த முகாமில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இரா.பொன்னி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார், மாவட்ட விளையாட்டு அலுவலர் க.புகழேந்தி, ரெட்கிராஸ் சங்க தலைவரும் எக்ஸ்னோரா மாநில துணைத் தலைவருமான ப.இந்திரராஜன், மருத்துவர்கள் க.கிருபாநிதி எழில்மாறன், ஏ.ராகவி, ஜெ.பிரியங்கா, வி.லட்சுமி, நேருயுவகேந்திரா கணக்காளர் அப்துல்காதர், மற்றும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், கலந்து கொண்டனர்.

இறுதியில் இந்த முகாமில் கலந்து கொண்ட பள்ளி மாணவ மாணவிகளுக்கும், காவல்துறையினருக்கும், சாய்சேவா யோகா இயற்கை மருத்துவமனை மருத்துவர்களுக்கும் நினைவு பரிசு மற்றும் பாராட்டு சான்று வழங்கப்பட்டன. முடிவில் நிர்வாக அலுவலர் வி.சாய்பிரசாத் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து