முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாணவர்களின் நலன்களை காப்பது குறித்து சட்ட விழிப்புணர்வு சிறப்பு முகாம்: தலைமை ஆசிரியர்கள் பங்கேற்பு

புதன்கிழமை, 21 ஜூன் 2017      திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் பள்ளி மாணவ மாணவிகளின் நலன்களை பாதுகாப்பது தொடர்பாக அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடந்தது.

 

விழிப்புணர்வு முகாம்

 

இந்த முகாமிற்கு மாவட்ட கல்வி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ரேணுகோபால் முன்னிலை வகித்தார். மாணவர்களுக்கான சட்ட பாதுகாப்பு குறித்து தி.மலை காவல்துறை உதவி கண்காணிப்பாளர் ரவளிபிரியா பேசினார். மேலும் மாணவர்களின் நலன்களை காப்பது தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்து காவல்துறை கூடுதல் கண்கணிப்பாளர் ராஜேந்திரன் விளக்கினார். மாணவர்கள் அணிந்து வரும் உடைகளில் குறிப்பிட்ட சமுதாயத்தை குறிக்கும் வகையில் உருவ படம், கொடிகள், வாசகம், இடம்பெறுவதை தவிர்க்க வேண்டும் அதேபோல் நோட்டு புத்தகங்களில் சமுதாய அடையாளங்கள் இடம்பெறுவதை தவிர்க்க வேண்டும்.

பள்ளி வளாகத்தில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்துதை தவிர்க்க வேண்டும் பிரச்சனைகள் ஏற்படுத்தும் வகையில் மாணவர்களின் பேச்சு செயல்பாடுகள் இருந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிகக் வேண்டும் மாணவிகளுக்கான சட்ட பாதுகாப்பு குறித்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் விளக்க வேண்டுமென கூட்டடத்தில் வலியுறுத்தப்பட்டது. இந்த முகாமில் காவல்துறை ஆய்வாளர்கள் வெங்கடேசன், ஹேமாமாலினி, முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து