தருமபுரி மாவட்டத்தில் காய்கறிகள் மற்றும் பழங்களின் சங்கிலி தொடர் மேலாண்மைத் திட்டத்தின் மூலம் ரூ. 32.44 கோடியில் செயல்படுத்த திட்டம்: கலெக்டர் கே.விவேகானந்தன், தகவல்

புதன்கிழமை, 21 ஜூன் 2017      தர்மபுரி
1

தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வேளாண் துறையின் மூலம் விவசாயிகள் மிக எளிதாக தாங்கள் சாகுபடி செய்யும் காய்கறிகள் மற்றும் பழ வகைகளை விற்பனை செய்வது குறித்தும்;இ ஏற்றுமதி செய்யும் வாய்ப்பினை அதிகரிப்பது குறித்தும் ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் கே.விவேகானந்தன், தலைமையில் நேற்று (21.06.2017) நடைபெற்றது.

பழவகைகள் விற்பனை

 

இக்கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்ததாவது :-தருமபுரி மாவட்ட விவசாயிகள் மிக எளிதாக தாங்கள் சாகுபடி செய்யும் காய்கறிகள் மற்றும் பழ வகைகளை விற்பனை மேற்கொள்ளவும் ஏற்றுமதி வாய்ப்பினை அதிகரிக்கவும் தமிழக அரசின் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் மூலம் காய்கறிகள் மற்றும் பழங்களின் சங்கிலி தொடர் மேலாண்மைத் திட்டத்தின் மூலம் ரூபாய் 32.44 கோடியில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் பாலக்கோடுஇ தருமபுரி மற்றும் அரூரில் பிரதான விற்பனை மையமும்இ பென்;னாகரத்தில் முதல் நிலை பதப்படுத்தும் நிலையமும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் விவசாயிகள் சாகுபடி செய்யும் காய்கறிகள் மற்றும் பழ வகைகளை சிரமம் இன்றி பிரதான விற்பனை மையத்திற்கு கொண்டு வர 26 சேகரிப்பு மையங்கள் அமைத்து காய்கறிகளை எடுத்துச்செல்ல போக்குவரத்து வாகன வசதி உட்பட ஏற்படுத்தி தர திட்டமிடப்பட்டுள்;ளது. இத்;திட்டத்தின் மூலம் ஏற்றுமதியாளர்கள் முதல் உள்ளுர் வியாபாரிகள் வரை அனைத்து வகையான வியாபாரிகளுக்கும் தங்களுக்கு தேவையான தரமான காய்கறிகள் மற்றும் பழங்கள் ஒரே இடத்தில் கிடைக்கவும் விவசாயிகளுக்கு இலாபகரமான விலை கிடைக்கவும் பல்வேறு வகையான நடவடிக்கைகள் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் இத்திட்டம் செயல்படுத்தப்படும் கிராமங்களில் தோட்டக்கலை பயிர்களின் உற்பத்தி திறனை அதிகரிக்கும் வகையில் தோட்டக்கலைத்துறையின் மூலம் 1200 ஏக்கர்; பரப்பளவில் நுண்ணீர் பாசன திட்டமும்இ தோட்டக்கலை பயிர்களின் புதிய தொழில் நுட்பங்களை கடைபிடித்து 192 ஏக்கர் அளவில் பரப்பு விரிவாக்க திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது. எனவே தருமபுரி மாவட்டத்திலுள்ள அனைத்து விவசாயிகள் இ வியாபாரிகள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் இத்திட்டத்தை சீரிய முறையில் முழுமையாக பயன்படுத்தி வேளாண் உற்பத்தியை இரு மடங்காகவும் வருமானத்தை மும்மடங்காகவும் உயர்த்திக்கொள்ள வேண்டுமாய் தமிழக அரசின் சார்பாக மாவட்ட கலெக்டர் கே.விவேகானந்தன், தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (வளர்ச்சி) சித்ரா, (விவசாயம்) ரா.ரா. சுசீலா, தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் அண்ணாமலை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் அமீர்பாஷா, தாட்கோ மேலாளர் வைத்தியநாதன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மகிழ்நன், மாவட்ட தொழில் மைய திட்ட அலுவலர் செந்தில்குமார், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் (நீர்வள ஆதார அமைப்பு) சிங்காரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து