முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசு இ-சேவை மையம் மூலம் மின்னணு குடும்ப அட்டையில் பெயர் மாற்றம், முகவரி மாற்றம், செய்யும் பணிகள்: கலெக்டர் சி.கதிரவன் துவக்கி வைத்தார்

புதன்கிழமை, 21 ஜூன் 2017      கிருஷ்ணகிரி
Image Unavailable

கிருஷ்ணகிரி கோட்டாட்சியர் அலுவலகத்தில், அரசு இ- சேவை மையம் மூலம் மின்னனு குடும்ப அட்டையில் பெயர் மாற்றம், முகவரி மாற்றம், திருத்தம் செய்யும் பணிகளை கலெக்டர் சி.கதிரவன் நேற்று ( 21.06.2017) துவக்கி வைத்தார்.

துவக்கி வைத்தார்

 

தமிழகத்தில் நடைமுறையில் உள்ள குடும்ப அட்டைகளுக்கு பதிலாக 01.04.2017 முதல் புதிய மின்னணு குடும்ப அட்டை வழங்கும் பணி தொடங்கப்பட்டு படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தற்போது நடைமுறையில் உள்ள 4,53,319 குடும்ப அட்டைகளில் நாளது தேதிவரை 3,27,031 மின்னணு குடும்ப அட்டைகள் அச்சிட்டு வரப்பெற்று அதில் 2,73,657 மின்னணு குடும்ப அட்டைகள் சம்மந்தப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 53,374 குடும்ப அட்டைகள் தற்போது வரப்பெற்று குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஏற்கனவே பெறப்பட்ட மின்னணு குடும்ப அட்டை தொலைந்து போயிருந்தாலோ அல்லது சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தாலோ அரசு இ-சேவை மையங்களில் ரூ.30ஃ- கட்டணம் செலுத்தி புதிதாக மாற்று மின்னணு குடும்ப அட்டை பெற்றுக் கொள்ளலாம். இதற்கு பழைய குடும்ப அட்டையில் பதிவு செய்துள்ள கைப்பேசி எண்ணை தெரிவிக்க வேண்டும்.அந்த எண்ணுக்கு ஒரு முறை பயன்படுத்தக் கூடிய கடவுச் சொல் அனுப்பப்படும். அந்த கடவுச்சொல்லை பயன்படுத்தி புதிய மின்னணு குடும்ப அட்டை வழங்கப்படும்.

புதிய மின்னணு குடும்ப அட்டையில் உள்ள விவரங்களை திருத்தம் செய்யும் பணி அரசு இ-சேவை மையங்களில் தற்போது நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் மின்னணு குடும்ப அட்டையில் குடும்ப உறுப்பினர்களின் பெயர்களை நீக்குதல், குடும்ப அட்டையின் வகை மாற்றம், குடும்ப தலைவர் பெயர் மாற்றம்; மற்றும் முகவரி மாற்றம் செய்தல் ஆகிய சேவைக்காக இ-சேவை மையங்களில் ரூ.60ஃ- செலுத்தி மனு செய்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது அம்மனுக்களுக்;கு வட்ட வழங்கல் அலுவலர் ஒப்புதல் அளித்த பிறகு மனுதாரரின் கைப்பேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். குறுஞ்செய்தி பெற்ற பிறகு அருகிலுள்ள இ-சேவை மையத்தை அனுகி ரூ.30- செலுத்தி புதிய மின்னணு குடும்ப அட்டை பெற்றுக்கொள்ளலாம். மற்றும் இணை தளம் வாயிலாக பெயர் திருத்தம், முகவரி திருத்தம், போன்ற திருத்தங்களை இலவசமாகவும் தாங்களே மேற்கொள்ளலாம். இந்த இரண்டு சேவைகளும் 20.06.2017 முதல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனைத்து வட்ட அலுவலகங்களிலும் உள்ள இ-சேவை மையங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என கலெக்டர் சி.கதிரவன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

நிகழ்ச்சி நிறைவில் மின்னனு குடும்ப அட்டையில் பெயர் மாற்றம் கோரி விண்ணபித்த கவிதா என்வருக்கு உடனடியாக ஆன் லைன் மூலம் பெயர் மாற்றம் செய்து புதிய மின்னனு குடும்ப அட்டையும், தொடர்ந்து புதிய மின்னனு அட்டைகள் 5 நபர்களுக்கு மின்னனு குடும்ப அட்டைகளை கலெக்டர்; இன்று (21.06.2017) வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.சாந்தி, கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் அருண், மாவட்ட வழங்கல் அலுவலர் குமரேசன், வட்டாட்சியர் மோகனசுந்தரம், அரசு கேபிள் டி.வி. வட்டாட்சியர் ஜெயகுமார், வட்ட வழங்கல் அலுவலர் முருகன், மற்றும் துறை அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து