2017-2018 ஆம் ஆண்டிற்கான கடன் திட்ட அறிக்கை ஊட்டியில் கலெக்டர் பொ.சங்கர் வெளியிட்டார்

புதன்கிழமை, 21 ஜூன் 2017      நீலகிரி
21ooty-2

2017_2018ஆம் ஆண்டிற்கான வருடாந்திர கடன் திட்ட அறிக்கையை ஊட்டியில் மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் வெளியிட்டார்.

ரூ.2496 கோடி

நீலகிரி மாவட்ட வங்கியாளர்கள் கூட்டம் மாவட்ட கலெக்டர்  அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது.  கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் தலைமை தாங்கி 2017-2018 ஆம் ஆண்டிற்கான ரூ.2496 கோடிக்கான கடன் திட்ட அறிக்கையை வெளியிட்டார்.-

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முருகேசன், ரிசர்வ் வங்கியின் உதவி பொது மேலாளர் வி.சரவணன்,
நபார்டு வங்கியின் துணை மண்டல மேலாளர் எஸ்.எஸ்.வசீதரன், திட்ட இயக்குநர் ரேணுகா தேவி, ஐஓபி தலைமை மண்டல மேலாளர் ஆர்.துரைராஜூ, கனரா வங்கி தலைமை மேலாளர் நாயக், முன்னோடி வங்கி மேலாளர் அறிவழகன் மற்றும் மாவட்டத்திலுள்ள அனைத்து வங்கியின் மேலாளர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து