ஊட்டி ஒய்எம்சிஏ பள்ளியில் யோகா தினம்

புதன்கிழமை, 21 ஜூன் 2017      நீலகிரி
21ooty-4

ஊட்டி ஒய்எம்சிஏ பள்ளியில் உலக யோகா தினம் கொண்டாடப்பட்டது.

பள்ளி அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஒய்எம்சிஏ செயலாளர் மேக்ஸ் வில்லியர்ட் ஜெயபிரகாஷ் வரவேற்றார். தலைவர் தனசிங் தலைமை தாங்கி பேசுகையில் இன்றைய பரபரப்பான வாழ்க்கை சூழலில் மனமும், உடலும் அமைதி பெற வேண்டுமானால் அதற்கு யோகா பயில்வது அவசியம். ஆகவே மாணவ, மாணவியர் தேர்வுகளில் மேம்பட தியானமும், யோகா பயிற்சியையும் மேற்கொள்ள வேண்டும்.

யோகா பயிற்சி

நிகழ்ச்சியில் பள்ளியின் யோகா ஆசிரியர் சாம்ராஜ் பள்ளி குழந்தைகளுக்கு யோகாவின் முக்கியத்துவம் குறித்தும், அதனை கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும் விளக்கினார். நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் உற்சாகத்துடன் யோகா பயிற்சியினை மேற்கொண்டனர்.
நிகழ்ச்சியில் இயக்குநர் சார்லஸ், பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி முதல்வர் கலைவாணி நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து