முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு தொடக்கவிழா: 12 அமைச்சர்கள் பங்கேற்று முகூர்த்தக்கால் நட்டனர்

புதன்கிழமை, 21 ஜூன் 2017      தமிழகம்
Image Unavailable

மதுரை : மதுரையில் வரும் 30-ம் தேதி நடைபெறவிருக்கும் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு தொடக்க விழாவையொட்டி நேற்று ரிங்ரோடு அம்மா திடலில் பூமிபூஜையுடன் 12 அமைச்சர்கள் பங்கேற்று முகூர்த்தகாலை நட்டு பணிகளை தொடங்கி வைத்தனர். 

வரும் 30-ம் தேதி ...

அ.தி.மு.க.நிறுவனரும், மறைந்த முதல்வருமான எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா தமிழக அரசு சார்பில் மதுரையில் வருகிற 30 - ம்தேதி நடக்கிறது. பாண்டிகோவில் ரிங்ரோடு அருகே உள்ள அம்மா திடலில் நடைபெறும் இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்கிறார். இந்த விழாவிற்கான முன்னேற்பாட்டு பணிகளை கடந்த ஞாயிற்றுக்கிழமை அமைச்சர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

முகூர்த்தகால் நடும் விழா

இதனை தொடர்ந்து விழாநடைபெறும் அம்மா திடலில் மேடை மற்றும் பந்தல் அமைப்பதற்கான முகூர்த்தகால் நடும் விழா நேற்று பூமிபூஜையுடன் நடைபெற்றது. அதிகாலை 5.45 மணிக்கு யாகம் வளர்க்கப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களை ஓத மதுரை மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் தலைமையில் முகூர்த்தகால் நடப்பட்டது. இதில் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன்,செல்லூர் கே.ராஜூ, பி.தங்கமணி, ஆர்.பி.உதயகுமார், ஆர்.காமராஜ், ஓ.எஸ்.மணியன், டாக்டர் விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ, கே.டி,ராஜேந்திரபாலாஜி, வி.எம்.ராஜலெட்சுமி, பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டு முகூர்த்தகாலை நட்டு மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் மதுரை மாநகராட்சி ஆணையாளர் அனீஷ்சேகர், மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா, எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.போஸ், பெரியபுள்ளான், நீதிபதி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.தமிழரசன், எம்.வி.கருப்பையா, முன்னாள் மாவட்ட செயலாளர் எம்.ஜெயராமன், ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் முனியசாமி, எம்.ஜி.ஆர்.மன்ற மாநில துணை செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், மாநகர் மாவட்ட நிர்வாகிகள் புதூர்துரைப்பாண்டி, சி.தங்கம், வில்லாபுரம் ஜெ.ராஜா, பகுதி கழக செயலாளர்கள் அண்ணாநகர் முருகன், தளபதி மாரியப்பன், வி.கே.எஸ்.மாரிச்சாமி, ஏ.கே.முத்திருளாண்டி, பைக்காரா கருப்புச்சாமி, முன்னாள் கவுன்சிலர் புதூர் அபுதாகீர், அன்னபூர்ணா தங்கராஜ், வழக்கறிஞர் ரமேஷ், நிலையூர் முருகன், ஒன்றிய செயலாளர் தக்கார் பாண்டி, ஆனையூர் கோட்டைச்சாமி, பாசிங்காபுரம் ஈஸ்வரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

பல்வேறு நிகழ்ச்சிகள்

இந்நிகழ்ச்சிக்கு பின்னர் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நம்மை எல்லாம் மக்களுக்கு அறிமுகப்படுத்தி ஆளாக்கிய, எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா வருகின்ற 30.06.2017 அன்று மதுரையில் தொடங்குகிறது.  இதற்கான ஏற்பாடுகள் மாவட்ட கலெக்டர் தலைமையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.  இந்த நூற்றாண்டு விழா வெற்றி தேவதை அம்மாவின் ஆசியுடன் வெற்றிகரமாக நடைபெறும்.  தொடர்ந்து ஒரு வார காலத்திற்கு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பாட்டு, கவிதை, கட்டுரைப்போட்டி, மாரத்தான் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். ஏறத்தாழ 54000 பயனாளிகளுக்கு அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும்.  மதுரையில் நடக்கும் நூற்றாண்டு விழாவிற்கு 5 இலட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மதுரையை தொடர்ந்து வருகின்ற 2018 ஜனவரி 30ம் தேதி வரை 31 வருவாய் மாவட்டங்களிலும் இந்த நூற்றாண்டு விழா நடைபெறும்.  சென்னையில் நடைபெறும் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள எம்.ஜி.ஆர் மீது அபிமானம் கொண்ட அனைத்து மாநில அரசியல் தலைவர்களும் அழைக்கப்படுவார்கள்.  இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து