முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 20 மீனவர்கள் - 137 படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள் - பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்

வியாழக்கிழமை, 22 ஜூன் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள 20 தமிழக மீனவர்களையும் உடனே விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று கடிதம் எழுதியுள்ளார். மேலும் 137 மீன்பிடி படகுகளையும் விடுவிக்க வழிகாண வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் 4 மீனவர்கள் ...

இது சம்பந்தமாக பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

‘‘தமிழக மினவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகள் தடுத்து நிறுத்தப்பட்டு அவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் விதத்தில் இலங்கை கடற்படையின் நடவடிக்கைகள் கண்டு இந்திய மீனவர்கள் சொல்லொண்ணா துயரும், வேதனையும், அச்சமுமடைந்து இருப்பதை வேதனையோடு தங்களது கவனத்துக் கொண்டு வருகிறேன். புதுக்கோட்டை மாவட்டம் ஜகதாபட்டினம் மீன்பிடி துறையிலிருந்து நேற்று (21-ம் தேதி) இயந்திரப் படகில் மீன் பிடிக்கச்சென்ற 4 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு காங்கேசன் துறைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

தமிழக அரசு கோரிக்கை

கடந்த 1974 மற்றும் 1967-ம் அண்டுகளில் இந்தியா - இலங்கையிடையே ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம் தொடர்பாக தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவை மீட்டு எடுப்பதன் முக்கியத்துவத்தையும், அதன் மூலம் தான் பாகிஸ்தான் ஜலசந்தி பகுதியில் தமிழக மீனவர்களின் மீன்பிடி பாரம்பரிய உரிமையை மீட்டெடுக்க முடியும் என்பதை பற்றியும் தமிழக அரசு மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வந்துள்ளது. கச்சத்தீவு தொடர்பான ஒப்பந்தங்களை எதிர்த்து சுப்ரீம் கோட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்பான மீன் பிடிப்பதற்கான ஒருங்கிணைந்த திட்டங்களை அங்கீகரிக்கக்கோரி மத்திய அரசிடம் தொடர்ந்து தமிழக அரசு கோரிக்கை விடுத்து வருகிறது.

ஜெயலலிதா வலியுறுத்தல்

இப்பிரச்சனை குறித்து, எங்களது மரியாதைக்குரிய, மறைந்த முதல்வர் ஜெயலலிதா, தங்களின் கவனத்துக்கு கொண்டு வந்து, கடிதங்கள் எழுதி அதில் மீனவர்களின் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணுமாறு வலியுறுத்தி வந்திருக்கிறார். தற்போது இலங்கை அரசிடம் தமிழக மீனவர்களின் மீன்பிடி படகுகள் உள்ளன. இந்த படகுகளை பயன்படுத்தாமல் நீண்ட நாட்களாக அப்படியே விட்டு வைத்தால், அவற்றுக்கு மீள முடியாத அளவில் சேதம் ஏற்படுவதோடு ஏழை மீனவர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படும் நிலை வந்துவிடும்.

உடனடி நடவடிக்கை எடுக்க ...

தமிழ்நாடு அரசு சமீபத்தில் சில சலுகைகளை மீனவர்களுக்கு அறிவித்திருக்கிறது. அதை இந்திய அரசும் ஆதரித்து இருக்கிறது. இந்நிலையில் தமிழக மீனவர்களின் படகுகளை திரும்ப கிடைக்கச் செய்தால், சலுகைகளை அவர்கள் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும். எனவே நீங்கள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்னு உடனடியாக உத்தரவிட்டு கைது செய்து இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 20 தமிழக மீனவர்களையும் 137 மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடவேண்டும். இதில் நீங்களே தனிப்பட்ட முறையில் தலையிட வேண்டும்.  இவ்வாறு அந்தக் கடிதத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து