முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராம்கோ தொழில்நுட்பக் கல்லூரியில் சர்வதேச யோகா தின சிறப்பு நிகழ்ச்சி

வியாழக்கிழமை, 22 ஜூன் 2017      விருதுநகர்
Image Unavailable

 இராஜபாளையம்,  - இராஜபாளையத்தில் அமைந்துள்ள ராம்கோ தொழில்நுட்பக் கல்லூரியில் சர்வதேச யோகா தின சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
 ஆண்டுதோறும் ஜீன் 21ம் நாள் சர்வதேச யோகா தினமாக ஆசரிக்கப்படுகிறது. இதனையொட்டி சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் டாக்டர் மகேந்திர கௌடா தலைமை வகித்து உரையாற்றினார். அவர் பேசுகையில் யோகாவின் சிறப்புகள் குறித்தும், இன்றைய இளைஞர்களுக்கு அதன் அவசியம் குறித்தும் எடுத்துரைத்தார். உடலும், உள்ளமும் ஒன்றிணைந்து செயல்பட யோகா பெரிதும் உதவுகிறது எனவும், இதனை பொறியியல் மாணவர்கள் பயன்படுத்தி வாழ்வில் வெற்றி பெற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
மின்னியல் மற்றும் மின்னனுவியல் துறைத்தலைவர் டாக்டர் கண்ணன் சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில் பல்வேறு உதாரணங்களைக் கூறி யோகாவின் பயன்களை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். எத்தனை வயதானாலும் யோகா பயிற்சியை மேற்கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.
இராஜபாளையம் மனவளக்கலை மன்றத்தின் பயிற்சியாளர்கள் திரு.வெங்கட்ட ராஜா மற்றும் திரு.முருகேசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு மாணவ, மாணவியர்களுக்கு யோகா பயிற்சியும் மனதை ஒருமுகப்படுத்தும் பயிற்சியும் அளித்தனர்.
நிகழ்ச்சியில் பல்வேறு பொறியியல் துறையைச் சார்ந்த மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள், ஆய்வக உதவியாளர்கள் ஆகிய நூற்றி ஐம்பதிற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ராம்கோ தொழில்நுட்பக் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் திரு. ஜெர்சோம் ஜெபராஜ் செய்திருந்தார். முன்னதாக மாணவர் அஸ்வின் வரவேற்றார். மாணவர் அப்துல்பாஷித் நன்றி கூறினார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து