முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெல்ஜியம் ரயில் நிலையத்தில் தீவிரவாதத் தாக்குதல்

வியாழக்கிழமை, 22 ஜூன் 2017      உலகம்
Image Unavailable

பிரஸ்ஸல்ஸ், பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸ்ல் உள்ள மத்திய ரயில் நிலை யத்தில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்தது.

அப்போது அங்கு வந்த மர்ம நபர் தான் கொண்டு வந்த சூட்கேஸை திடீரென வெடிக்கச் செய்தார். இதனால் பயணிகள் அலறியடித்தபடி ஓடினர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு வீரர்கள் குவிக்கப்பட்டனர். அந்தத் தீவிரவாதியைச் சுற்றிவளைத்த போலீஸார் சுட்டு வீழ்த்தினர். அவரது உடலை சோதனை செய்ததில் பெல்ட் வடிவில் வெடிகுண்டு களைக் கட்டி இருந்ததை அடுத்து, அவற்றை வெடிகுண்டு நிபுணர்கள் உடனடியாக செயலிழக்கச் செய்தனர். இதில் யாருக்கும் பாதிப்பில்லை. இருந் தாலும் மத்திய ரயில் நிலையம் அருகே நடமாடிய பொதுமக்கள் வெளியேற்றப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து