முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.2 3 பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகள் ஆணையாளர் அனீஷ் சேகர் ஆய்வு

வியாழக்கிழமை, 22 ஜூன் 2017      மதுரை
Image Unavailable

மதுரை.-மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.2 மற்றும் மண்டலம் எண்.3 பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகளை ஆணையாளர் மரு.அனீஷ் சேகர், ஆய்வு மேற்கொண்டார்.
மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.2 வார்டு எண்.25   கண்ணனேந்தல் மகாலெட்சுமி நகர் 1 வது மற்றும் 2 வது தெருவில் ரூ.4.70 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால் பணிகளையும், சர்வேயர் காலனி 1 முதல் 6 வரை உள்ள மெயின் தெருக்கள் மற்றும் குறுக்குத் தெருக்களில் ரூ.67 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டுள்ள தார் சாலை பணிகளையும், வார்டு எண்.27 மருதங்குளத்தில் வறட்சி நிவாரண திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகளையும், புதிதாக கட்டப்பட்ட நீர்த்தேக்க தொட்டியினையும், லாரிகள் மூலம் தண்ணீர் நிரப்பும் பகுதியையும்,  வார்டு எண்.44 கே.கே.நகர் அய்யனார் கோவில் குறுக்குத் தெருக்களில் ரூ.12.10 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டுள்ள தார் சாலை பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். வார்டு எண்.25 கண்ணனேந்தல்ஜி.ஆர். நகர் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பதற்;காக ஆய்வு மேற்கொண்டார். வார்டு எண்.27 டுவார்டு நகர் பகுதி மக்கள் தங்கள் பகுதியில் சாலைகள் அமைத்து தருமாறு ஆணையாளர் அவர்களிடம் கோரிக்கை வைத்தனர். உடனடியாக அப்பகுதியில் ஆணையாளர்  நேரடியாக தார் சாலை அமைப்பதற்காக ஆய்வு மேற்கொண்டார். 
அதனைத் தொடர்ந்து வார்டு எண்.25 கண்ணனேந்தல் பகுதிகள், சர்வேயர் காலனி 1, 2, 3 ஆகிய தெருக்கள், டுவார்டு காலனி ஆகிய பகுதிகளிலும், வார்டு எண்.44 கே.கே.நகர் மெயின் ரோடு, அழகர்கோவில் மெயின் ரோடு, இ.எம்.ஜி நகர் 1, 2 தெருக்கள் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற தீவிர துப்புரவுப் பணியினை ஆய்வு மேற்கொண்டார். மேலும் லூhர்து நகர் பகுதியில் வீடு வீடாக டெங்கு கொசு ஒழிப்பு பணி மேற்கொள்வதையும், அபேட் ஊழியர்கள் வீடுவீடாக அபேட் மருந்து தெளிக்கும் பணியினையும் ஆணையாளர் அவர்கள் பார்வையிட்டார்.
முன்னதாக மண்டலம் எண்.3 வார்டு எண்.67 மஞ்சணக்கார தெருவில் உள்ள மாநகராட்சி பள்ளியில் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறை கட்டிடங்களையும், வார்டு எண்.64 புதுமகாளிப்பட்டி ரோடு திரௌபதிஅம்மன் 2 மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் ரூ.7.80 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கூடுதல்; வகுப்பறை கட்டிட பணிகளையும், காமராசர் சாலையில் ரூ.8.94 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள வார்டு எண்.52, 53 மற்றும் 72 ஆகிய வார்டு அலுவலக கட்டிடத்தையும் ஆணையாளர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மஞ்சணக்கார தெரு மற்றும் கீரைத்துறை திரௌபதியம்மன் ஆரம்பப்பள்ளி 1 ஆகிய பகுதியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு படிக்கும் குழந்தைகள் குறித்தும், வழங்கப்படும் உணவுகள் குறித்தும், பதிவேடுகளையும் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது உதவி ஆணையாளர்கள்  பழனிச்சாமி செல்லப்பா, செயற்பொறியாளர்கள் ராஜேந்திரன்,  சந்திரசேகரன்,  மக்கள் தொடர்பு அலுவலர்  சித்திரவேல், உதவி செயற் பொறியாளர்கள் திரு.அலெக்ஸ்சாண்டர், திரு.ஷர்புதீன், சுகாதார அலுவலர்கள்  வசுப்பிரமணியன், நாகராஜ்,  சுhதார ஆய்வாளர்  அலாவுதீன் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து