முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீர் விவகாரம்: ஐ.நா.பொதுச்செயலாளருக்கு இந்தியா தெளிவான விளக்கம்

வியாழக்கிழமை, 22 ஜூன் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, இந்தியா-பாகிஸ்தான் இடையே உள்ள பிரச்சினைகளுக்கு இருதரப்பினர்கள் மட்டுமே முடிவுகாண வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை பொதுச்செயலாளருக்கு இந்தியா மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் இடையே உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகாண ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அந்தோணியோ கட்டரஸ் முயற்சி செய்து வருகிறார். இதனையொட்டி இந்தியா இந்த விளக்கத்தை அளித்துள்ளது. இந்தியா-பாகிஸ்தான் இடையே உள்ள பிரச்சினைகள் இருதரப்பினர்களுக்கிடையேயானது. இருதரப்பினர்களுக்கிடையேயான பிரச்சினைகளுக்கு இருதரப்பினர்கள்தான் முடிவு காண வேண்டும் என்று ஐ.நா. பொதுச்செயலாளர் கட்டரஸ் உணரும்படி இந்திய தெளிவுபடுத்தியுள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஆகியோர்களை கட்டர்ஸ் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது கட்டரஸ் வலியுறுத்தியது தெரியும் என்று இந்திய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் கோபால் பக்லே நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார். இந்தியா-பாகிஸ்தான் இடையே உள்ள பிரச்சினைகள் இருதரப்பினர்களிடையானது. இந்த பிரச்சினைகளுக்கு இருதரப்பினர்களுமே முடிவு செய்ய வேண்டும் என்று கோபால் பக்லே கூறினார். இதை கட்டர்ஸ் உணரும்படி இந்தியா தரப்பில் விளக்கப்பட்டுள்ளது. கட்டர்ஸ் கூறியுள்ளதை ஊடகள்களில் பார்த்தேன். அவர் கேள்விக்கு பதில் அளிக்கும்போது ஒரு கேள்வியை எழுப்பியுள்ளார். இருதரப்பு பிரச்சினையை சம்பந்தப்பட்ட இருதரப்பினர்கள்தான் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று கோபால் பக்லே தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபை பொதுச்செயலாளராக கடந்த ஜனவரி மாதம் கட்டர்ஸ் பதவி ஏற்றார். அதன் பின்னர் ஐ.நா. சபையின் தலைமை அலுவலகத்தில் முதன் முதலாக சமீபத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வுகாண பேச்சுவார்த்தையை இந்தியாவும் பாகிஸ்தானும் தொடங்க முயற்சி செய்து வருகிறேன் என்று தெரிவித்திருந்தார். இதனையொட்டி கோபால் பக்லே விளக்கம் அளித்துள்ளார்.

கட்டர்ஸ் பேட்டியின்போது அவரிடம் காஷ்மீர் விவகாரத்தில் தலையீடு உண்டா? என்று நிருபர்கள் கேட்டதற்கு, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை 3 முறை சந்தித்துள்ளேன். இந்திய பிரதமர் நரேந்திர மோடியை 2 முறை சந்தித்துள்ளேன். அந்த சந்திப்பு என்னவாக இருக்கும் என்று சிரித்துக்கொண்டே அவர் பதில் அளித்தது குறிப்பிடத்தக்கது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து