முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விவசாயிகள் தரமான நெல் விதைகள் பெற்று பயனடைய விதைபண்ணையில் ராமநாதபுரம் கலெக்டர் நடராஜன் ஆய்வு

வியாழக்கிழமை, 22 ஜூன் 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயிகள் தரமான நெல் விதைகளை பெற்று பயனையும் வகையில் விதை பண்ணையில் கலெக்டர் நடராஜன் நேரில் ஆய்வு செய்தார்.
ராமநாதபுரம் மாவட்டம்,  திருவாடானை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நெய்வயல் கிராமத்தில் வேளாண்மைத்துறை (விதை தரச்சான்று) மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் விதைப்பண்ணை அமைக்கும் திட்டத்தினைப் பயன்படுத்தி பயனாளி மூலம் அமைக்கப்பட்டுள்ள விதைப்பண்ணையினை மாவட்ட கலெக்டர் முனைவர்.ச.நடராஜன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இதன்பின்னர் அவர் கூறியதாவது:- ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயிகள் தரமான விதைகளை பெற்று பயன்பெறும் வகையில் விதைப்பண்ணைகள் அமைத்தல் மற்றும் சான்று விதை கொள்முதல் குறித்த விதை செயல்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளன. இத்திட்டத்தின் மூலம் இராமநாதபுரம் மாவட்டத்தில் 492 ஹெக்டேர் பரப்பளவில் நெற்பயிருக்கும், 6 ஹெக்டேர் பரப்பளவில் சிறு தானியப் பயிர்களுக்கும், 47 ஹெக்டேர் பரப்பளவில் பயறு வகை பயிர்களுக்கும், 50 ஹெக்டேர் பரப்பளவில் எண்ணெய் வித்து பயிர்களுக்கும் விதைப்பண்ணைகள் அமைத்திட திட்டமிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் நீர்; பாசன வசதி உள்ள இடங்கள் தேர்வு செய்யப்பட்டு பயறு மற்றும்  எண்ணெய் வித்து பயிர்களுக்கு விதைப்பண்ணைகள் அமைக்கப்பட்டு விதைகள் கொள்முதல் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 
 மேலும் திருவாடானை ஊராட்சி ஒன்றியம் நெய்வயல் கிராமத்தில் வழிமேகம் என்ற விவசாயி தனக்கு சொந்தமான 18 ஏக்கர் நிலத்தில் டிகேஎம். 13 ரக நெற்பயிர்களையும், சஞ்சீத்குமார் என்ற விவசாயி தனக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலத்தில் என்.எல்.ஆர். ரக நெற்பயிர்களையும், 12 ஏக்கர் நிலத்தில் கோ.51 ரக நெற்பயிர்களையும் ஆக மொத்தம் 33 ஏக்கர் பரப்பளவில் தரமான நெற்பயிர் விதைகளைப் பயிரிட்டுள்ளனர். இந்த விவசாய நிலங்களில் இதற்கு முன்பாக கோடை பருவத்தில் இவ்வாறு சாகுபடி செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட வில்லை.  இதுவே முதன் முறையாகும். விதைப்பண்ணை அமைப்பதற்காக மேற்குறிப்பிட்டுள்ள விவசாயிகளுக்கு வேளாண்மைத்; விதைச்சான்று துறையின் சார்பாக தரமான விதைகள் வழங்கப்பட்டு, வேளாண்மைத் துறையின் களப்பணியாளர்கள் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு கண்காணித்து வருகின்றனர். தொடர்ந்து விதை மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, தரச்சான்று அலுவலக ஆய்வகத்தில் பரிசோதனை செய்யப்படும். இத்தகைய தொடர் கண்காணிப்பின் மூலம் ஏக்கருக்கு குறைந்த பட்சம் 2.5 முதல் 3 டன் அளவிலான தரமான நெல் விதைகள் கிடைக்கப்பெறும்.  இதன் மூலம்  விதைப்பண்ணை அமைத்துள்ள விவசாயிகள் பயன்பெறுவதோடு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தரமான நெல் விதைகளைப் பெற்று பயனடைய வாய்ப்பாக அமைகின்றது. இவ்வாறு தெரிவித்தார்.  
 திருவாடானை, அரசூர் கிராமத்தில் வேளாண்மை (விற்பனை) துறையின் மூலம்  நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.175 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் 2000 மெ.டன் கொள்ளளவு கொண்ட ஒழுங்குமுறை விற்பனைக்கூட கிட்டங்கி மற்றும் அலுவலக கட்டிடத்திற்கான கட்டுமானப் பணிகளை கலெக்டர் செய்தார்.  கட்டுமானப் பணிகள் 90 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளன.  மீதமுள்ள பணிகளும் துரிதமாக மேற்கொண்டு விரைவாக விவசாயிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அலுவலர்களிடத்தில் அறிவுறுத்தினார். இதுதவிர, திருவாடானை வட்டத்திற்குட்பட்ட அஞ்சுக்கோட்டை கிராமத்தில் உள்ள காட்டுரணி மற்றும் வண்டலூரணி ஆகிய இரண்டு ஊரணிகளில் மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையின் மூலம் நபார்டு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் ஊரணி ஆழப்படுத்தும் பணிகளை ஆய்வு செய்தார். ஆய்வின் போது ஊரணி கரைகளில் பலன் தரும் மரக்கன்றுகளை நட்டு பராமரித்திட மாவட்ட நீர்;வடிப்பகுதி மேம்பாட்டு முகமையைச் சார்ந்த அலுவலர்களிடத்தில் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது வேளாண்மைத்துறை இணை இயக்குநர் ஆர்.அரிவாசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வி.எஸ்.வெள்ளைச்சாமி, வேளாண்மை துணை இயக்குநர் ராமசாமி பாண்டியன், விதைச்சான்று உதவி இயக்குநர் எஸ்.எஸ்.அப்துல்லா, திருவாடானை வேளாண்மை உதவி இயக்குநர் ஜெர்சன் தங்கராஜ், உதவி செயற்பொறியாளர்  (வேளாண்மை பொறியியல் துறை) செல்வம் உள்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து