தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் சேரமாட்டோம்: ஐக்கிய ஜனதா தளம்

வியாழக்கிழமை, 22 ஜூன் 2017      அரசியல்
Nitish Kumar 2017 05 15

பாட்னா, தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் சேரமாட்டோம் என்று ஐக்கிய ஜனதாதளம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

பீகார் மாநில கவர்னராக இருந்த ராம்நாத் கோவிந்த், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக ஜனாதிபதி பதவிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவரை ஐக்கிய ஜனதாதளம் ஆதரித்துள்ளது. தற்போது எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் இருக்கும் ஐக்கிய ஜனதா தளம், ராம்நாத் கோவிந்த்க்கு ஆதரவு தெரிவித்திருப்பதால் அந்த கட்சி மீண்டும் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் சேரலாம் என்று கூறப்படுகிறது.

இதை ஐக்கிய ஜனதாதளம் அடியோடு மறுத்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் சேரமாட்டோம் என்று அந்த கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் டி.சி. தியாகி தெரிவித்துள்ளார். பீகார் மாநில கவர்னராக ராம்நாத் கோவிந்த், மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் அரசுடன் ஆக்கப்பூர்வமாக செயல்பட்டார். அவர் எந்தவித மோதல்போக்கையும் கடைப்பிடிக்கவில்லை. பீகார் மாநில கவர்னராக ராம்நாத் கோவிந்த் பதவி வகித்தபோது மிகவும் கண்ணியமாக நடந்துகொண்டார். ராம்நாத் நடத்தையானது முதல்வர் நிதீஷ்குமாருக்கு மிகவும் பிடித்துவிட்டது. அதனால்தான் அவரை நாங்கள் ஆதரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்காக தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் சேருவோம் என்பது அர்த்தம் அல்ல என்றும் தியாகி கூறினார். இதற்கிடையில் தனது முடிவை மாற்றிக்கொள்ளும்படி முதல்வர் நிதீஷ்குமாரை கேட்டுக்கொள்வோம் என்று ராஷ்ட்ரீய ஜனதாதளம் தலைவர் லல்லு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து