முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜனாதிபதி வேட்பாளராக மீரா குமார் நிறுத்தப்படுகிறார்: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அறிவிப்பு

வியாழக்கிழமை, 22 ஜூன் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, எதிர்க்கட்சிகள் சார்பாக ஜனாதிபதி பதவிக்கு வேட்பாளராக மீரா குமார் நிறுத்தப்படுகிறார். இவரை எதிர்க்கட்சிகள் ஏகமனதாக தேர்ந்தெடுத்துள்ளனர். இவரும் தலித் வகுப்பை சேர்ந்தவரோடு மறைந்த தலைவர் ஜெகஜீவன் ராம் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜூலை 24-ம் தேதியோடு முடிவடைகிறது. அதற்குள் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க வேண்டும். ஜனாதிபதி தேர்தல் வரும் ஜூலை 17-ம் தேதி நடக்கும்  என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனையொட்டி ஜனாதிபதி பதவிக்கு  ஆளும் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக பீகார் மாநில கவர்னராக இருந்த ராம்நாத் கோவிந்த் வேட்பாளராக  அறிவிக்கப்பட்டுள்ளார். இவரை ஜனாதிபதி பதவிக்கு  ஏகமனதாக தேர்ந்தெடுக்க பாரதிய ஜனதா பெரும் முயற்சியை மேற்கொண்டது. அனைத்துக்கட்சி தலைவர்களையும் ஆளும் பாரதிய ஜனதா குழுவில் இடம் பெற்றுள்ள மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு கேட்டுக்கொண்டார்.

இந்தநிலையில் எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தலைமையில் நேற்று டெல்லியில் நடைபெற்றது. அப்போது ஜனாதிபதி பதவிக்கு எதிர்க்கட்சிகள் சார்பாக யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்று பரிசீலனை செய்யப்பட்டது. மேற்குவங்க மாநில முன்னாள் கவர்னரும் மகாத்மா காந்தியின் பேரனுமான கோபால கிருஷ்ண காந்தி  சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் ஆகியோர்களின் பெயர்களை இடதுகம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி சிபாரிசு செய்தார்.

மீரா குமார், முன்னாள் மத்திய அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே, தற்போது ராஜ்யசபை உறுப்பினராக இருக்கும் பால்சந்தர் முன்ஜிகர் ஆகியோர்களின் பெயர்களை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் சிபாரிசு செய்தார். ஷிண்டேவும் பால்சந்தரும் மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்தவர்கள்.  கடைசியில் லோக்சபை முன்னாள் சபாநாயகர் மீராகுமாரை அனைத்து எதிர்க்கட்சிகளும் ஏகமனதாக  ஜனாதிபதி பதவிக்கு வேட்பாளராக தேர்வு செய்தனர்.

இதை கூட்டத்திற்கு பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்தார்.  ஜனாதிபதி பதவிக்கு மீரா குமாரை வேட்பாளராக நிறுத்த முடிவு செய்துள்ளோம். இதற்கு இதர கட்சிகளும் ஆதரவு தெரிவிக்கும் என்றும் சோனியா காந்தி கூறினார்.  காங்கிரஸ் கட்சியின் மற்றொரு மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்தும் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் எதிர்க்கட்சிகள் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக மீராகுமார் ஏகமனதாக நிறுத்தப்படுகிறார் என்று தெரிவித்தார்.

ராம்நாத் கோவிந்த்வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சார்பாக ஜனாதிபதி பதவிக்கு வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள மீராகுமாரும் தலித் வகுப்பை சேர்ந்தவர். அதோடுமட்டுமல்லாது தூதராகவும் பணியாற்றியவர். தலித் மக்களின் முன்னேற்றத்திற்காக டாக்டர் அம்பேத்காருக்கு அடுத்தபடியாக பாடுபட்ட மறைந்த தலைவர் ஜெகஜீவன்ராம் மகளாவார் மீராகுமார். மத்தியில் காங்கிரஸ் தலைமையில் அரசு இருந்தபோது லோக்சபை சபாநாயகராகவும் மீரா குமார் பதவி வகித்தவர்.

மீராகுமாருக்கு ஆதரவு அளிக்கும்படி பீகார் மாநில ஐக்கிய ஜனதா தலைவரும், முதல்வருமான நிதீஷ்குமாரை கேட்டுக்கொள்வோம் என்று எதிர்க்கட்சி தலைவர்களில் ஒருவரும் ராஷ்ட்ரீய ஜனதாதளம் தலைவருமான லல்லு பிரசாத் யாதவ் கூறியுள்ளார். ராம்நாத் ஆதரவு கொடுப்போம் என்று நிதீஷ்குமார் ஏற்கனவே அறிவித்துவிட்டார். அதை மறுபரிசீலை செய்ய நிதீஷ்குமாரை கேட்டுக்கொள்வோம் என்று லல்லு கூறியுள்ளார்.

இதற்கிடையில் ஜனாதிபதி பதவிக்கு தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்த், இன்று வேட்புமனுத்தாக்கல் செய்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து