முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காசிமேட்டில் நவீன வசதிகளுன் மீன் விற்பனை கூடம் - சட்டசபையில் அமைச்சர் ஜெயகுமார் தகவல்

வியாழக்கிழமை, 22 ஜூன் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : சென்னை காசிமேட்டில் சி.சி.டி.வி கேமரா உள்ளிட்ட நவீன வசதிகளுடன் மீன் ஏலக்கூடம் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.

தமிழக சட்டசபையில் கேள்விநேரம் முடிந்ததும் நேரமில்லா நேரத்தின் போது தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. வெற்றிவேல் பேசியதாவது:-

ஆர்.கே.நகர் தொகுதியில் 47-வது வட்டத்தில் காசிமேடு மீன்பிடி துறைமுகம் உள்ளது. தற்போது இந்த மீன்பிடி துறைமுகம் புதிய இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இது ஒரு தனிமையான இடம். அது பாதுகாப்பில்லாத இடம், பழைய இடத்திலேயே மீன் விற்பனை மேற்கொள்ள வேண்டும் என்று மீனவர்கள் கருதுகிறார்கள். இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலையிட்டு தீர்க்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார்:- ஆசியாவிலேயே மிக சிறந்த மீன்பிடி துறைமுகமாக இதை அமைக்க மறைந்த முதல்வர் ஜெயலலிதாரூ.90 கோடி ஒதுக்கினார். அப்போது காசிமேடு மீன்பிடி வளாகத்தையும் ஜெயலலிதா தனது திருக்கரத்தால் திறந்து வைத்தார். அங்கு சி.சி.டி.வி காமிரா, மற்றும் நவீன சாதனங்களுடன் ரூ.12 கோடி செலவில் அனைத்துப் பாதுகாப்பு அம்சங்களுடன் மீன் ஏல வளாகம் திறக்கப்பட்டு இருக்கிறது. முன்பு இருந்த இடம் சுகாதாரமற்றதாக இருந்தது. இது அதை விட 2.5 மடங்கு பெரியது. 90 சதவீத மீனவர்கள் அங்கு சென்று விட்டார்கள்.

ஜெயலலிதாவே நிறைவேற்றிய இந்த திட்டத்தை தவறான கண்ணோட்டத்துடன் பார்க்க கூடாது. இது குறித்து ஒரு வழக்கு நிலுவையில் இருக்கிறது. அதற்கு நல்ல முடிவு கிடைக்கும் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து