முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசியலை மட்டுமே தொழிலாக கொள்ளாதீர் : எம்.எல்.ஏ.க்களுக்கு காங்கிரஸ் அட்வைஸ்

வெள்ளிக்கிழமை, 23 ஜூன் 2017      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : அரசியலை மட்டும் தொழிலாக கொள்ளாமல் தனியாக ஒரு தொழிலை தொடங்க வேண்டும் என்று எம்.எல்.ஏ.க்களுக்கு காங்கிரஸ் உறுப்பினர் பாண்டி அட்வைஸ் செய்துள்ளார்.

தமிழக சட்டசபையில் நேற்று தொழில்துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை மானியக்கோரிக்கை விவாதத்தின் போது சட்டமன்ற உறுப்பினர் பாண்டி பேசும்போது, முதுகுளத்தூர் தொகுதி மிகவும் பின்தங்கியத் தொகுதியாகும். அந்தப்பகுதியில் குடிநீர் பஞ்சம் அதிகமாக இருக்கிறது. இந்த பகுதியில் உள்ள நீர் உப்பு நீராக இருக்கிறது. எனவே அதனை குடிக்க முடியாமல் உள்ளது. எனவே அந்த நீரை சுத்திகரிக்கும் அமைப்பு இல்லாததால் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.

மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ளது. ஒவ்வொரு இடத்திலும் உள்ள பிரச்னையை முடித்துக் கொடுத்தால் ஆட்சிக்கு நல்லப் பெயர் கிடைக்கும். எம்.எல்.ஏ.க்கள் அரசியல் மட்டும் தொழிலாக இல்லாமல், தொழில் ஆரம்பிக்க வேண்டும்.

ராமநாதபுரத்திற்கு காவிரி கூட்டு குடிநீர் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும். மக்கள் அந்த பகுதியில் தண்ணீருக்காக சைக்கிளில் 10 குடங்களை வைத்துக் கொண்டு சென்று சிரமப்பட்டு எடுத்து வருகின்றனர். எனவே தண்ணீருக்காக மக்கள் படும் அவலநிலையை தீர்த்து வைத்தாலே இந்த அரசு நிலையான அரசாக இருக்குமென்று அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து