முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு ஜூலை 1-ம் தேதி முதல் ஊதிய உயர்வு : அமைச்சர் நிலோபர் கபில்

வெள்ளிக்கிழமை, 23 ஜூன் 2017      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு .ஜூலை 1-ம் தேதி முதல் ஊதியம் உயர்த்தி அளிக்கப்பட உள்ளதாக சட்டசபையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் தெரிவித்தார்.

தமிழக சட்டசபையில் சட்டமன்ற உறுப்பினர்கள் கஸ்தூரி வாசு (அ.தி.மு.க), திராவிட மணி (தி.மு.க) ஆகியோர் தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு ஊதியம் உயர்த்தப்பட வேண்டியதன் அவசியம் குறித்து கவன ஈர்ப்பு கொண்டு வந்தனர்.

அதற்கு பதிலளித்து தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் நிலோபர் கபில்; தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் தேயிலை தோட்டங்களில் பணிபுரிகின்ற தொழிலாளர்களுக்கு 20.3.2013-ன் தொழிற்சங்கங்களுடன் நேரடி பேச்சுவார்த்தை மேற்கொண்டு ஊதிய உயர்வு தொடர்பாக தனித்தனியாக இருதரப்பு ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டனர். இந்த ஒப்பந்தங்களின்படி 1.7.2017 முதல் அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் ரூ.183.50 உடன் ரூ.7.50 சேர்த்து தினம் ரூ.191 வழங்கவும் அரசு நிர்ணயிக்கும் மாறுபாடும் அகவிலைப்படியை வழங்கவும் ஒப்பந்த காலம் 1.7.2017 முதல் 3.6.2021 வரை என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

இந்த ஒப்பந்தங்களில் தொழிற்சங்கங்கள் கையெழுத்து போட்டுள்ளது. இந்த ஒப்பந்தங்களின் படி தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் ஜூலை 1-ம் தேதி முதல் தினமும் அடிப்படை ஊதியமாக ரூ.191 மற்றும் அகவிலைப்படி 103.03 ஆக மொத்தம் தினமும் 294 பெறுவார்கள். இவ்வாறு அமைச்சர் நிலோபர் கபீல் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து