முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இனிமேல் பாஸ்போர்ட்டில் இந்தி மொழியும் சேர்க்கப்படும்: சுஷ்மா

வெள்ளிக்கிழமை, 23 ஜூன் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, பாஸ்போர்ட் இனிமேல் இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் இருக்கும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளுக்கு செல்ல பாஸ்போர்ட் அவசியமாகும். இந்த பாஸ்போர்ட் ஆங்கில மொழியில் மட்டும் இருந்தது. இனிமேல் பாஸ்போர்ட்டானது ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் இருக்கும் என்று மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நேற்று டெல்லியில் அறிவித்தார். பாஸ்போர்ட் சட்டம் இயற்றப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசுகையில் சுஷ்மா சுவராஜ் இதை தெரிவித்தார்.  எளிமையான முறையில் பாஸ்போர்ட் பெறுவதற்காக இந்தி மொழி சேர்க்கப்படுகிறது.

பாஸ்போர்ட் பெறுவதற்கு கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. அதாவது 8 வயதிற்குட்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கும் 60 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் பெண்களுக்கும் 10 சதவீத கட்டணம் குறைக்கப்படும். இந்த கட்டண குறைப்பு நாளை (இன்று) முதல் அமுல்படுத்தப்படுகிறது.  முதியவர்கள் பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிப்பது அதிகரித்து வருகிறது.  தத்கல் முறையில் பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிப்பவர்கள் ரேஷன் கார்டையும் உடன் தாக்கல் செய்ய வேண்டும். கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள் வங்கிகளில் நிரந்தர கணக்கு எண் இல்லாதவர்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும். வேத காலத்தில் 8 வயதில்தான் குழந்தைகள் குருகலத்திற்கு அனுப்பப்பட்டனர். 60 வயதான ஆண்களும் பெண்களும் வாழ்க்கை முறையில் ஓய்வு பெற்ற வனத்திற்கு சென்றனர். அங்கு சமுதாயத்திற்காக அவர்கள் தங்களுடைய வாழ்க்கையை அர்ப்பணித்து வந்தனர்.

தனிநபர் விபரம் குறித்து பாஸ்போர்ட்டில் ஆங்கிலத்தில் குறிப்பிடுவதால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது என்று புகார்கள் வந்துள்ளன.  அதனால் பாஸ்போர்ட் இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இனிமேல் அச்சடிக்கப்பட்டிருக்கும். மேலும் சில விதிமுறைகள் தேவையில்லாமலும் நடைமுறைக்கு ஒத்துவராதவைகளாகவும் இருக்கின்றன என்பதை நான் உணர்ந்துள்ளேன்.   அரபு நாடுகளில் வழங்கப்படும் பாஸ்போர்ட் அரபு மொழியில் அச்சடிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில் வழங்கப்படும் பாஸ்போர்ட்கள் ரஷ்ய மொழியில் அச்சடிக்கப்பட்டிருக்கிறது. நாம் ஏன் இந்தி மொழியில் பாஸ்போர்ட் அச்சடிக்கக்கூடாது என்று சுஷ்மா சுவராஜ் கேள்வி எழுப்பினார்.

விதவை பெண்கள், தனிமையாக இருக்கும் தாய்மார்கள்,அனாதைகள் ஆகியோர் சர்வதேச சுற்றுலா தஸ்தாவேஸூகள் பெறுவதில் எளிதாக இருக்கும்படி சில விதிமுறைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. தத்கல் முறையில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் ஆதார் கார்டு, பான் கார்டு, ரேஷன் கார்டு மற்றும் தாம் கிரிமினல் இல்லை என்பதற்கான அத்தாட்சி சான்றுதல்கள், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவைகளை விண்ணப்பத்துடன் சேர்த்து கொடுக்க வேண்டும். பாஸ்போர்ட் வழங்க போலீசார் விசாரணையானது நீண்ட கால தாமத்தை ஏற்படுத்துகிறது. போலீஸ் விசாரணையை 6 நாட்களுக்குள் முடித்து தகவல் கொடுக்க வேண்டும் என்று ஆந்திரா, தெலுங்கானா, டெல்லி, சண்டீகர், குஜராத், கோவா ஆகிய மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது. இதை மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும். தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் வழங்க முடிவு செய்திருப்பதால் பாஸ்போர்ட் அலுவலகங்களில் பணிபுரிபவர்களுக்கு எந்தவித பாதிப்பும்  சிக்கல்களும் வராது என்று உறுதி அளிக்கிறேன் என்று சுஷ்மா சுவராஜ் மேலும் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியையொட்டி தபால் துறை சார்பாக நினைவு தபால் தலை வெளியிடப்பட்டது. இதில் மத்திய தகவல்துறை இணை அமைச்சர் மனோஜ் சின்ஹா, வெளியுறவுத்துறை இணை அமைச்சர்கள் வி.கே. சிங், எம்.ஜே. அக்பர் ஆகியோர்களும் கலந்துகொண்டனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து