முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் நவீன நுண்துளை அறுவை சிகிச்சை கருவியை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார்

வெள்ளிக்கிழமை, 23 ஜூன் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை,  சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.20.89 லட்சம் மதிப்பீட்டில் நவீன நுண்துளை அறுவை சிகிச்சை கருவியை மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார்.

ஜெயலலிதா அரசு சுகாதாரத் துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு, உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை அளிக்கும் வகையில் சுகாதார கட்டமைப்புகளை வலுப்படுத்துதல், மருத்துவ மனித வளத்தை பெருக்குதல் போன்றவைகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இதன் மூலம் அம்மாவினுடைய அரசு சுகாதாரச் சேவைகளை மக்களுக்கு வழங்குவதில் இந்தியாவிற்கே தமிழ்நாடு ஒரு முன்மாதிரி மாநிலமாக மட்டுமில்லாமல் முன்னோடி மாநிலமாகவும் திகழ்ந்து வருகிறது. சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.20.89 லட்சம் மதிப்பீட்டில் நவீன நுண்துளை அறுவை சிகிச்சை கருவியை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.

இந்த நவீனக் கருவியின் மூலம் வலியில்லாமல் சிறிய தழும்புடன் குறைந்த ரத்த கசிவுடன் பித்தப் பை, இரப்பை உணவுக்குழாய், கல்லீரல் மற்றும் சிக்கலான குடல் புற்றுநோய், குடல் இரக்கம் ஆகிய அறுவை சிகிச்சைகளை செய்ய இயலும். மேலும், இக்கருவியின் மூலம் குடல் பருமன் குறைக்கும் அறுவை சிகிச்சையும் எளிதாக மேற்கொள்ள இயலும். இந்நிகழ்ச்சியில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். விஜயகுமார், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், மருத்துவக் கல்லூரி இயக்குநர் ஏ.எட்வின்ஜோ, கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் பி.வசந்தாமணி மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து