முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பள்ளி மாணவர்களுக்கு சுற்றுலா விழிப்புணர்வு: அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தகவல்

வெள்ளிக்கிழமை, 23 ஜூன் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை, பள்ளி மாணாக்கர்களுக்கு சுற்றுலாவைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், மாவட்ட அளவிலான பள்ளி மாணாக்கர்களுக்கு அந்தந்த மாவட்டத்தில் அமைந்துள்ள ஏதேனும் ஒரு சுற்றுலாத் தலத்திற்கு ஒரு நாள் சுற்றுலா சென்று வருவதற்கு, முன்னாள் முதலமைச்சர் அம்மாவின் நல்லாசியுடன், முதல்வரின் ஆணையின்படி, சுற்றுலாத்துறை மூலம் மாவட்டம் ஒன்றிற்கு ரூ.2 லட்சம் வீதம் மொத்தம் ரூபாய் 64 லட்சம் நிதி ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்தார். 2017-2018 -ம் ஆண்டு சுற்றுலாத்துறை மானியக் கோரிக்கைகளுக்கான 5 அறிவிப்புகளை சட்டசபையில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் வெளியிட்டார்.

அந்த அறிவிப்பில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் வசதியாக தங்கிச் செல்வதற்கு, விடுதிகள் ஓட்டல் தமிழ்நாடு என்ற பெயரில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மூலம் ராமேஸ்வரம், மாமல்லபுரம், கொடைக்கானல், ஏற்காடு, மதுரை மற்றும் கன்னியாகுமரி ஆகிய தலங்களில் செயல்பட்டு வரும் 6 ஓட்டல் தமிழ்நாடு விடுதிகளுக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மூலம் புதிய வர்த்தக சலவை எந்திரங்கள் ரூ. 54 லட்சம் செலவில் வாங்கப்படும்.

தமிழ்நாட்டிற்கு, வருகை தரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக தமிழ்நாடு மற்றும் இதர மாநிலங்களில் செயல்பட்டு வரும் அனைத்து சுற்றுலா அலுவலகங்களுக்கும், புதிய மடிக்கணினி, பிரிண்டர், ஸ்கேனர் ஆகிய உபகரணங்கள் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் வாங்கப்படும். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மூலம் கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருச்சி, திருச்செந்தூர், ஏற்காடு, ஒகேனக்கல், காஞ்சிபுரம், ராமேஸ்வரம் (புதிய வளாகம்) ஆகிய தலங்களில் செயல்பட்டு வருகின்ற ஓட்டல் தமிழ்நாடு வளாகங்களில் கம்பியில்லா மெய்நிலை (வைஃபை) சேவை ரூபாய் 25 லட்சம் செலவில் ஏற்படுத்தப்படும். உலக சுற்றுலா அமைப்பு அறிவித்துள்ளவாறு செப்டம்பர் 27–ம் நாள், உலக சுற்றுலா தினமாக ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசால் கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வாண்டு உலக சுற்றுலா தின விழா, மாநில அளவில் திருச்சியில் கொண்டாட ரூபாய் 25 லட்சம் நிதி ஒப்பளிப்பு வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து