முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமேசுவரத்தில் நகராட்சி சார்பில் பாலித்தீன் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம்.

வெள்ளிக்கிழமை, 23 ஜூன் 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமேசுவரம்,-: ராமேசுவரம் பகுதியில் பொதுமக்கள் பாலித்தீன் பயன்படுத்துவதால்  மண் வளம் மற்றும் வன விலங்குகளுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்த  விழிப்புணர்வு பிரச்சாரம் நகராட்சி சார்பில் நேற்று நடைபெற்றது.

 ராமேசுவரத்தில் பாலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருள்களை பொதுமக்கள் அதிகமாக பயன் படுத்தி வருகின்றனர்.இதனால் வன விலங்குகள் கழிவு உணவுகளுடன் சேர்ந்த பிளாஸ்டிக் பொருள்களை உண்ணுவதால் அதிகமாக உயிரிழப்பு ஏற்பட்டு வந்தது.மேலும் மண்வளம் பாதிக்கப்பட்டு வந்தது.இதனையொட்டி ராமேசுவரம் பகுதியில் பாலித்தீன் பொருள்கள் பயன்படுத்த தடைவிக்க வேண்டும் என ராமேசுவரம் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம் நகராட்சி நிர்வாகத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. அதன் பேரில் அரசு உத்தரவின்போரில்   ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஆலோசணைப்படி நகராட்சி நிர்வாகம் சார்பில் முதல் கட்டமாக பாலித்தீன் பொருள்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வனவிலங்குகளுடனும்,சில வன விலங்குகள் தோற்றத்தில் நகராட்சி ஊழியர்கள் வேடமனிந்தும் விழிப்புணர்வு பிரச்சாரம் நேற்று நடைபெற்றது.இந்த விழிப்புணர்வு பிரிச்சாரத்தை ராமேசுவரம் நகராட்சி ஆணையர் ஜெயராமராஜா தலைமைவகித்தார்.விழிப்புணர்வு பிரிச்சாரத்து ராமேசுவரம் நுகர்வோர் இயக்க செயலாளர் களஞ்சியம் துவக்கி வைத்தார்.அதன் பின்னர் பொதுமக்கள் அதிகமாக வரும் பகுதியான ராமேசுவரம் மார்க்கெட் பகுதியில் பாலித்தீன் பொருள்கள் பயன்படுத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்த துண்டு பிரச்சாரத்தை பொதுமக்களிடமும்,சிறுவியாபாரிகளிடம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் ஜயப்பன் வழங்கினார்.அதன் பின்னர் ராமேசுவரம்  நகர் முழுவதும் துண்டு பிரச்சாரத்தை வழங்கிகொண்டு நகராட்சி ஊழியர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தி சென்றனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து