முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக மாணவர் வடிவமைத்த உலகின் மிகச்சிறிய செயற்கைகோளை நாசா விண்ணில் செலுத்தியது

வெள்ளிக்கிழமை, 23 ஜூன் 2017      இந்தியா
Image Unavailable

மும்பை,தமிழக மாணவரால் வடிவமைக்கபட்ட உலகின் மிகச்சிறிய  64 கிராம் எடை மட்டுமே உள்ள கலாம்சாட் செயற்கைக்கோளை நாசா விண்ணில் செலுத்தியது.

மங்கல்யாண்

விண்வெளி ஆராச்சியில் இந்தியா தொடர்ந்து பல சாதனைகளை செய்து வருகிறது. நிலவில் நீர் இருக்கிறதா என்பதை கண்டறிய பல நாடுகள் பல வருடங்களாக ஆராய்ச்சிகள் செய்துவந்தன. ஆனால் அதை முதலில் கண்டுபிடித்தது இந்தியாவின் சந்திராயன் செயற்கைகோளாகும். அதேபோல் முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்திற்கு மங்கல்யாண் செயற்கைகோளை வெற்றிகரமாக அனுப்பி மற்ற நாடுகளை திரும்பி பார்க்க வைத்தது.

64 கிராம் மட்டுமே ...

இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த 18 வயது மாணவர் ரிபாத் சாருக் மற்றும் அவரது குழுவினர் உலகின் மிகச்சிறிய செயற்கைகோளை வடிவமைத்து சாதனை படைத்தனர். அந்த செயற்கைகோளின் எடை 64 கிராம் மட்டுமே ஆகும். அந்த செயற்கைகோளிற்கு இந்தியாவின் ஏவுகணை மனிதரான மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் அவர்களை நினைவுகூறும் வகையில் ‘கலாம்சாட்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

விண்ணில் ஏவப்பட்டது

இந்த செயற்கைகோளை விண்ணில் ஏவுவதாக அமேரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா அறிவித்தது. கடந்த 21 ம் தேதி ஏவப்படுவதாக இருந்த நிலையில் வானிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி நாசாவின் வாலோப் திவில் இருந்து நேற்று முன்தினம் இந்திய நேரப்படி 3 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. சுமார் 240 நிமிடங்கள் விண்ணில் பறந்த செயற்கைகோள் கடலில் விழுந்தது. இதை குறித்து மகிழ்ச்சியை தெரிவித்த பணி இயக்குனர் ஸ்ரீமதி கேசன் பேசுகையில் ”செயற்கைகோளை மீட்டு சேகரிக்கப்பட்ட தகவல்களை எடுப்பதற்காக தங்களிடம் அனுப்பி வைக்கப்படும்” என தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து