முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

11-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் இன்று தொடக்கம்

வெள்ளிக்கிழமை, 23 ஜூன் 2017      விளையாட்டு
Image Unavailable

லண்டன், 8 நாடுகள் பங்கேற்கும் 11-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் இன்று தொடங்குகிறது. தொடக்க நாளான இன்று இரண்டு ஆட்டங்கள் நடக்கிறது. முதல் ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன.

8 நாடுகள் ...

11-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் இன்று தொடங்குகிறது. இதில் இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, மே.இ.தீவுகள் ஆகிய நாடுகள் பங்கேற்கின்றன.

ஜூலை 23-ல் இறுதிப்போட்டி

ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும் ஜூலை 15-ம் தேதி வரை லீக் ஆட்டங்கள் நடக்கிறது. முதல் அரை இறுதி ஜூலை 18-ம் தேதி, 2-வது அரை இறுதி ஜூலை 20-ம் தேதியும் நடக்கிறது. இறுதிப்போட்டி ஜூலை 23-ம் தேதி லண்டனில் நடக்கிறது.

இந்தியா - இங்கிலாந்து மோதல்

தொடக்க நாளான இன்று இரண்டு ஆட்டங்கள் நடக்கிறது. இதில் இந்தியா -இங்கிலாந்து, நியூசிலாந்து- இலங்கை அணிகள் மோதுகின்றன. மிதாலிராஜ் தலைமையிலான இந்திய மகளிர் அணி 29-ம் தேதி மே.இ.தீவுகளுடனும், ஜூலை 2-ம் தேதி பாகிஸ்தானுடன், 5-ம் தேதி இலங்கையுடனும், 8-ம் தேதி தென் ஆப்பிரிக்காவுடனும், 12-ம் தேதி ஆஸ்திரேலியாவுடனும், 15-ம் தேதி நியுசிலாந்துடனும் மோதுகிறது.இந்திய மகளிர் அணி 2005-ம் ஆண்டு இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது. இந்த முறை இந்தியா சாதிக்குமா என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 3 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து