முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயிற்சியாளர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தது கும்ப்ளேயின் தனிப்பட்ட முடிவு: கங்குலி கருத்து

வெள்ளிக்கிழமை, 23 ஜூன் 2017      விளையாட்டு
Image Unavailable

மும்பை, பயிற்சியாளர் பதவியில் இருந்து கும்ப்ளே ராஜினாமா செய்தது அவரது தனிப்பட்ட முடிவு என ஆலோசனை கமிட்டி உறுப்பினரும், முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.

பதவியில் இருந்து விலகல்

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலிக்கும், பயிற்சியாளர் கும்ப்ளேவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் புதிய பயிற்சியாளர் தேர்வுக்கு கிரிக்கெட் வாரியம் ஏற்பாடு செய்தது. இதற்கு கும்ப்ளேவும் விண்ணப்பித்து இருந்தார். பயிற்சியாளரை தேர்வு செய்யும் தெண்டுல்கர், கங்குலி, லட்சுமணன் ஆகியோர் கொண்ட குழு கும்ப்ளேவை வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கும் பயிற்சியாளராக இருக்கும்படி கேட்டு கொண்டது. அதற்கு அவரும் முதலில் சம்மதித்தார். ஆனால் அவர் திடீரென்று பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

தனிப்பட்ட முடிவு

இதனால் தலைமை பயிற்சியாளர் இல்லாமலே இந்திய அணி மே.இ.தீவுகள் சென்று இருக்கிறது. விராட் கோலியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவே அவர் விலகியது உறுதியானது. இந்த நிலையில் கும்ப்ளே விலகல் குறித்து ஆலோசனை கமிட்டி உறுப்பினரும், முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி கூறியதாவது:-

மே.இ.தீவுகள் தொடருக்கு புறப்படும் சமயத்தில் கும்ப்ளே ராஜினாமா செய்து இருக்கிறார். அது அவரது தனிப்பட்ட முடிவு. அதுபற்றி மேலும் பேச விரும்பவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிலையில் அனில் கும்ப்ளே வீரர்களை குழந்தைகள் போல் கண்டிப்புடன் நடத்தியதாகவும் இது விராட் கோலிக்கு பிடிக்கவில்லை என்றும் இதனால்தான் இருவருக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 4 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து