முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நூற்றாண்டு விழாவையொட்டி மாநிலம் முழுவதும் எம்.ஜி.ஆரின் திரைப்படங்கள் வெளியிடப்படுகிறது

வெள்ளிக்கிழமை, 23 ஜூன் 2017      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல், -நூற்றாண்டு விழாவையொட்டி மாநிலம் முழுவதும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் திரைப்படங்கள் செய்தித்துறை வாகனங்கள் மூலமாக வெளியிடப்படுகிறது
மறைந்தும் மறையாது தமிழக மக்கள் மனதில் என்றென்றும் நீக்கமற நிறைந்திருக்கும் தமிழக முன்னாள் முதல்வர் பாரத ரத்னா புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா மாநிலம் முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. அ.இ.அ.தி.மு.க. அம்மா அணி சார்பில் தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன. தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமைச்சர்கள், பாராளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், கழக மூத்த நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெறுகிறது.
தமிழ்நாடு அரசு செய்தித்துறை சார்பில் மாநிலம் முழுவதும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள் வெளியிடப்பட உள்ளது. செய்தித்துறை வாகனத்தின் மூலமாக இந்த படங்கள் திரையிடப்படுகிறது. ஆயிரத்தில் ஒருவன், அடிமைப் பெண், அன்பே வா, மன்னாதி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன். நாடோடி மன்னன், படகோட்டி ஆகிய திரைப்படங்கள் பொதுமக்களுக்கு காண்பிக்கப்பட் உள்ளது. இதன் முதற்கட்டமாக ஜுன் 23ம் தேதி மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம் உத்தப்பநாயக்கனூர், சேடப்பட்டடி ஊராட்சி ஒன்றியம் சேடப்பட்டி, கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியம் குராயூர், மதுரை மேற்கு கோவில் பாப்பாகுடி, மதுரை கிழக்கு கள்ளந்திரி, மேலூர் பதினெட்டாங்குடி, வாடிப்பட்டி ஆண்டிப்பட்டி ஆகிய இடங்களில் ஆயிரத்தில் ஒருவன் திரையிடப்பட்டது.
செய்தித்துறையின் சார்பில் 12 வாகனங்கள் மூலமாக மதுரை மாவட்டம் முழுவதும் இத்திரைப்படங்கள் பொதுமக்களுக்கு காண்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மற்ற பகுதிகள் அனைத்திலும் தொடர்ந்து எம்.ஜி.ஆரின் திரைப்படங்கள் திரையிடப்படுகிறது. இதனாhல் புரட்சித் தலைவரின் தீவிர ரசிகர்கள் குதூகலம் அடைந்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து