முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜனாதிபதி தேர்தல்: பா.ஜ.க கூட்டணி சார்பில் போட்டியிடும் ராம்நாத் கோவிந்த் வேட்பு மனு தாக்கல் செய்தார்

வெள்ளிக்கிழமை, 23 ஜூன் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க கூட்டணி சார்பில் போட்டியிடும்   ராம்நாத் கோவிந்த் நேற்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கலின் போது, பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட 7 மாநில முதல்வர்களும், தமிழக முன்னாள் முதல்வர் ஒ.பி.எஸ் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் கலந்து கொண்டனர்.

வெற்றி வாய்ப்பு அதிகம்

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பதவிக்காலம், அடுத்த மாதம் 24-ம் தேதி முடிவடைய உள்ளதால், அடுத்த மாதம் 17-ம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல், வருகிற 28-ம் தேதி முடிவடைகிறது. இத்தேர்தலில், ஆளும் பா.ஜனதா கூட்டணி வேட்பாளராக ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பா.ஜனதா கூட்டணியில் இடம்பெறாத அ.தி.மு.க., ஐக்கிய ஜனதாதளம், தெலுங்கானா ராஷ்டிர சமிதி, பிஜூ ஜனதாதளம், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் போன்ற கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இதன்காரணமாக எதிர்க்கட்சிகள் சார்பில் மக்களவை முன்னாள் சபாநாயகர் மீரா குமார் வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருந்தாலும், ராம்நாத்கோவிந்த்திற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக தெரிகிறது.

4 குழுக்களாக ....

இந்த நிலையில் பா.ஜ.க. வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் வெள்ளிக்கிழமை தனது வேட்பு மனுவை தாக்கல் செய்வார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அதற்கான ஏற்பாடுகளை பா.ஜ.க. மூத்த தலைவர்கள் செய்தனர். ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுபவரின் வேட்பு மனுவை எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் தலா 50 பேர் முன்மொழியவும், வழி மொழியவும் வேண்டும். அந்த வகையில் ராம்நாத் கோவிந்தை முன்மொழிவோர், வழிமொழிவோரை 4 குழுக்களாக பா.ஜ.க. தலைமை பிரித்திருந்தது. ஒவ்வொரு குழுவிலும் தலா 60 எம்.பி.க்கள்- எம்.எல்.ஏ.க்கள் இடம் பெறும் வகையில் குழுக்கள் பிரிக்கப்பட்டிருந்தன. பா.ஜ.க. குழுக்களில் இடம் பெற்றிருந்த அனைவரும் டெல்லிக்கு வரவழைக்கப்பட்டிருந்தனர். நேற்று காலை அவர்கள் அனைவரும் பாராளுமன்றத்துக்கு வந்தனர். நூலக கட்டிடத்தில் அவர்கள் தங்க வைக்கப்பட்டனர்.

வேட்பு மனு தாக்கல்

இந்த நிலையில்,  ராம்நாத்கோவிந்த் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட நேற்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார். பாராளுமன்ற இல்லத்தில்  மக்களவை செயலாளர் அருண் மிஸ்ராவிடம், தனது வேட்பு மனுவை ராம்நாத்கோவிந்த் அளித்தார். இதையடுத்து முன்மொழிபவர்கள், வழிமொழிபவர்களின் மனுக்கள் வழங்கப்பட்டன.

ராம்நாத்கோவிந்த் வேட்புமனுவை பிரதமர் மோடி, முதலில் முன்மொழிந்தார். இவருக்கு அடுத்த படியாக ராஜ்நாத்சிங் முன்மொழிந்தார்.  இதற்கான முதல் குழுவில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இடம் பெற்றிருந்தனர். பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி தலைமையில் 2-வது குழுவினரும் மனுக்களை கொடுத்தனர். மூன்றாவது குழுவில் பா.ஜ.க. கூட்டணி கட்சியான சிரோமணி அகாலி தளம் கட்சித்தலைவர் பிரகாஷ் சிங் பாதல், மத்திய மந்திரி வெங்கய்யா நாயுடு மற்றும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் இடம் பெற்றிருந்தனர். ராம்நாத் கோவிந்தை வழிமொழிவதற்கான 4-வது குழுவில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர். 4 குழுக்களாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதும், அனைவரும் ராம்நாத் கோவிந்துக்கு கை குலுக்கியும், மலர் கொத்துகள் வழங்கியும் வாழ்த்து தெரிவித்தனர்.

முதல்வர் எடப்பாடி பங்கேற்பு

ராம்நாத் கோவிந்தை முன்மொழியும், வழிமொழியும் குழுக்களில் பா.ஜ.க. மாநில முதல்வர்கள், கூட்டணி கட்சிகளின் முதல்வர்கள், ஆதரவு கொடுக்கும் முதல்வர்கள் என 7 மாநில முதல்வர்கள் பங்கேற்றனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் இதில் பங்கேற்றார். தமிழக முன்னாள் முதல்வர் ஒ.பி.எஸ். காஷ்மீர் முதல்வர் மெகபூபா, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஆகியோரும் நேரில் வந்து ஆதரவு தெரிவித்தனர். ராம்நாத் கோவிந்தை ஆதரித்து அறிவிப்பு வெளியிட்ட ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவரும், பீகார் முதல்வருமான நிதிஷ் குமார் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. அது போல பிஜூ ஜனதாதளம் தலைவரும், ஒடிசா முதல்வருமான நவீன் பட்நாயக்கும் கலந்து கொள்ளவில்லை.

பலத்த பாதுகாப்பு

சமாஜ்வாடி கட்சி சார்பில் மேல்-சபை எம்.பி. ராம்கோபால் யாதவ் கலந்து கொண்டார். ராம்நாத் கோவிந்த் வேட்புமனு தாக்கல் நிகழ்ச்சியில் பிரதமர், மத்திய அமைச்சர்கள், முதல்வர்கள் திரளாக கலந்து கொண்டதால் பாராளுமன்றம் கோலாகலமாக காணப்பட்டது. இதையொட்டி பாராளுமன்ற வளாகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 3 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து