முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் நாடு முழுவதும் வெளியீடு

வெள்ளிக்கிழமை, 23 ஜூன் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் நேற்று நாடு முழுவதும் வெளியிடபட்டது.

மதுரை ஐகோர்ட் தடை

இந்தியா முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் சேர நீட் என்ற தேசிய தகுதி நுழைவு தேர்வு கடந்த மே மாதம் 7-ம் தேதி நடைபெற்றது. 11 லட்சத்து 38 ஆயிரம் பேர் இந்த தேர்வை எழுதினார்கள். தமிழ்நாட்டில் 85 ஆயிரம் பேர் தேர்வை எழுதினார்கள். இந்த தேர்வு தொடர்பாக வழக்கு தொடர்ந்ததையொட்டி தேர்வு முடிவை வெளியிட மதுரை ஐகோர்ட்டு தடை விதித்தது.

முடிவு வெளியீடு

இந்த உத்தரவை ரத்து செய்தும், வருகிற 26-ம் தேதிக்குள் தேர்வு முடிவை வெளியிடலாம் என்றும் கடந்த 12-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதற்கிடையே தேர்வு முடிவு 20ம் தேதி  வெளியாகும் என்று தகவல் வெளியானது. ஆனால் நீட் தேர்வு முடிவு அன்று வெளியிடப்படவில்லை. இந்த நிலையில் நாடு முழுவதும் நீட் தேர்வு நேற்று வெளியிடபட்டது.  நீட் தேர்வு முடிவுகளை http://cbseneet.nic.in  என்ற இணையதளத்தில் அறியலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து