முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிதாக அறிவிக்கப்பட்ட 30 ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் தமிழகத்தின் நெல்லை, தூத்துக்குடி திருச்சி, திருப்பூர் நகரங்கள் தேர்வு

வெள்ளிக்கிழமை, 23 ஜூன் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, மத்திய அரசின் ஸ்மார்ட் நகரங்கள் திட்டத்தின் கீழ் புதிதாக 30 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த புதிய பட்டியல் நேற்று மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு வெளியிட்டார். இந்த பட்டியலில் தமிழகத்திலிருந்து மேலும் 4 நகரங்கள் நெல்லை, தூத்துக்குடி, திருச்சி, திருப்பூர் இடம்பெற்றுள்ளன.

90-ஆக அதிகரிப்பு

இதற்காக ரூ.57,33 கோடி முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஸ்மார்ட் நகரங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள நகரங்களின் எண்ணிக்கை 90-ஆக அதிகரித்துள்ளது. ஸ்மார்ட் நகரம் திட்டம் அறிவிக்கப்பட்டதின் 2-ம் ஆண்டை ஒட்டி டெல்லியில் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு புதிய நகரங்கள் பட்டியலை அறிவித்தார்.

எந்தெந்த நகரங்கள்?

கேரள மாநிலம் திருவனந்தபுரம், சத்தீஸ்கர் மாநிலம் நயா ராய்பூர், குஜராத் மாநிலம் ராஜ்கோட், ஆந்திர மாநிலம் அமராவதி, பிஹார் மாநிலம் பாட்னா, தெலங்கானாவில் கரீம்நகர், பிகாரில் முசாபர் நகர், புதுச்சேரி, குஜராத் காந்திநகர், ஜம்மு - காஷ்மீர், மத்தியப் பிரதேசத்தின் சாகர், ஹரியாணாவின் கர்னால், மத்தியப்பிரதேசத்தின் சட்னா, கர்நாடகாவின் பெங்களூரு, இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லா, உத்தராகண்டின் டேராடூன், தமிழகத்தின் திருப்பூர், மகாராஷ்டிரா மாநிலத்தில் சின்ச்வாட், பிம்ப்ரி, சத்தீஸ்கரின் பிலாஸ்பூர், அருணாச்சலப் பிரதேசத்தின் பாசிகட், ஜம்மு, குஜராத்தின் தாஹோத், தமிழ்நாட்டின் திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, உத்தரப்பிரதேசத்தின் ஜான்சி, மிசோரம் மாநிலத்தின் அய்ஸ்வால், உ.பி.யின் அலகாபாத், அலிகார் மற்றும் சிக்கிம் மாநிலத்தின் கேங்டோக் ஆகிய நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் 4 நகரங்கள்..

தமிழகத்தில் திருப்பூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி ஆகிய 4 நகரங்கள் ஸ்மார்ட் நகரங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. தேர்வு செய்யப்பட்டுள்ள 30 நகரங்களில் 26 நகரங்கள் கையடக்க விலையில் வீட்டுமனை திட்டங்களை முன்வைத்துள்ளன. 26 நகரங்கள் புதிய பள்ளிகளையும் 29 நகரங்கள் சாலை மேம்பாடு மற்றும் மறுசீரமைப்புப் பணிகளையும் முன்வைத்துள்ளதாக வெங்கய்யா நாயுடு தெரிவித்தார்.

திண்டுக்கல் - ஈரோடு

இவை தவிர தேர்ந்தெடுக்கப்பட உள்ள 10 நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டின் திண்டுக்கல், ஈரோடு, துட்டா நகர் (அருணாசலபிரதேசம்), நவி மும்பை, கிரேட்டர் மும்பை, அமராவதி (மராட்டியம்), இம்பால் (மணிப்பூர்), ஷில்லாங் (மேகாலயா) உள்ளிட்ட 20 நகரங்கள் இடம் பெற்றுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து