முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரேசில் நாட்டு இறைச்சிக்கு அமெரிக்காவில் திடீர் தடை

சனிக்கிழமை, 24 ஜூன் 2017      உலகம்
Image Unavailable

Source: provided

வாஷிங்டன் : பிரேசில் நாட்டு இறைச்சியை இறக்குமதி செய்ய அமெரிக்கா தடை விதித்து உள்ளது. சமீப நாட்களில் மட்டும் 8 லட்சத்து 60 ஆயிரம் கிலோ இறைச்சிகளை அமெரிக்கா பிரேசிலுக்கு திருப்பி அனுப்பி உள்ளது.

வெளிநாடுகளுக்கு இறைச்சி ஏற்றுமதி செய்வதில் பிரேசில் நாடு முன்னணியில் உள்ளது. இங்கிருந்து சீனா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவுக்கு அதிக அளவில் இறைச்சி ஏற்றுமதி செய்யப்படுகிறது. மாட்டு இறைச்சி, கோழி இறைச்சி, பன்றி இறைச்சி ஆகியவற்றை மற்ற நாடுகளுக்கு அனுப்புகின்றனர்.

லஞ்சம் கொடுத்து சான்றிதழ்

ஆனால், இந்த இறைச்சிகள் தரமற்றவையாக இருப்பதாக புகார்கள் வந்தன. சமீபத்தில் அங்குள்ள இறைச்சி உற்பத்தி நிறுவனங்கள் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து தரமான இறைச்சி என சான்றிதழை பெற்று வெளிநாடுகளுக்கு அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டது.

இறைச்சிக்கு  தடை

இதையடுத்து பிரேசில் நாட்டு இறைச்சியை இறக்குமதி செய்ய அமெரிக்கா தடை விதித்து உள்ளது. சமீப நாட்களில் மட்டும் 8 லட்சத்து 60 ஆயிரம் கிலோ இறைச்சிகளை அமெரிக்கா பிரேசிலுக்கு திருப்பி அனுப்பி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து