முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லண்டன் டவர் தீ விபத்துக்கு பழுதான குளிர்சாதன பெட்டிதான் காரணம்: ஸ்காட்லாந்து யார்டு போலீசார் தகவல்

சனிக்கிழமை, 24 ஜூன் 2017      உலகம்
Image Unavailable

Source: provided

லண்டன் : 79 பேரை பலிகொண்ட லண்டன் கிரென்ஃபெல் டவர் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்துக்கு அக்கட்டிடத்தில் இருந்த பழுதான குளிர்சாதன பெட்டிதான் காரணம் என ஸ்காட்லாந்து யார்டு போலீசார் தெரிவித்துள்ளனர்.

இங்கிலாந்து நாட்டில் லண்டனின் வடக்கு கென்சிங்டனில் அமைந்துள்ள கிரென்ஃபெல் டவர் எனும் 24 மாடிகளை கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பில் கடந்த வாரம் புதன்கிழமை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அந்த கட்டிடத்தில் உள்ள 120 பிளாட்டுகளிலும் வசித்த மக்கள் அவசரம் அவசரமாக வெளியேறினர். பலர் தீப்பிடித்த பகுதியில் சிக்கிக்கொண்டு வெளியேற முடியாமல் தவித்தனர்.

79 பேர் பலி

இந்த தீ விபத்தில் 79 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும், நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தீ விபத்து குறித்து விசாரணை நடத்துவதற்காக ஸ்காட்லாந்து யார்டு போலீசில் சிறப்பு படை உருவாக்கப்பட்டது.

இந்நிலையில், அந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் பழுதாகி இருந்த குளிர்சாதன பெட்டியில் இருக்கும் பிரீசர் பகுதியில் இருந்துதான் தீ வெளிப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அடுக்குமாடி குடியிருப்பில் முறையான பராமரிப்பு மற்றும் தீ தடுப்பு உபகரணங்கள் இல்லாததும் முக்கிய காரணம் எனவும் போலீஸ் அறிக்கை தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து