முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இயற்கை இடையூறுகளால் மானசரோவர் யாத்திரை தடங்கல்: சீன அரசு தகவல்

சனிக்கிழமை, 24 ஜூன் 2017      உலகம்
Image Unavailable

Source: provided

காங்டாக் : இந்தியாவிலிருந்து சீனப் பகுதியில் அமைந்துள்ள மானசரோவர் பகுதிக்குச் செல்ல இந்திய யாத்திரிகளுக்கு சீனா அனுமதியளிக்க மறுத்துள்ளது.

இயற்கை சீற்றத்தால் சீனப் பகுதியிலுள்ள சாலைகள் மோசமடைந்துள்ளதாகவும், சீற்றங்கள் அடங்கிய பிறகு பயணத்தைத் தொடரலாம் என்று சீன அதிகாரிகள் கூறியிருப்பதாகத் தெரிகிறது.


இது தொடர்பாக இந்திய அதிகாரிகள் சீன தரப்பினருடன் தொடர்பு கொண்டிருப்பதாக புதுடெல்லி வெளியுறவு அதிகாரிகள் தெரிவித்தனர். சிக்கிம்மிலுள்ள நாது லா கணவாய் வழியாக சுமார் 50 இந்தியர்கள் கைலாய மலை - மானசரோவருக்கு புனித யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே நிலவி வரும் பொருளாதார தாழ்வாரன், அணுசக்தி விநியோக குழு விவகாரங்களில் நிலவி வரும் இடைவெளி காரணமாக சீனா புனிதப்பயணத்தைத் தடுக்கிறதோ எனும் அச்சம் எழுந்துள்ளதாகவும் தெரிகிறது.

கைலாய -மானசரோவர் திபெத் தன்னாட்சிப் பகுதியில் அமைந்துள்ளது. வருடந்தோறும் நூற்றுக்கணக்கான இந்தியர்கள் இப்பகுதிக்கு புனிதப்பயணம் மேற்கொள்கின்றனர். தற்போது அனுமதிக்காக காத்திருக்கும் பயணிகள் இவ்வாண்டின் முதல் கட்ட யாத்திரிகளாவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து