முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய ராணுவ வீரர்களை தாக்கி அதனை வீடியோவில் பதிவு செய்யும் பாக். ராணுவம்

சனிக்கிழமை, 24 ஜூன் 2017      உலகம்
Image Unavailable

ஜம்மு, பாகிஸ்தானின் எல்லை பாதுகாப்பு குழுவிற்கும் இந்திய வீரர்களுக்கும் ஏற்பட்ட சண்டையில் இரு இந்திய வீரர்கள் மரணமடைந்தனர். மேலும் ஒரு பாகிஸ்தான் வீரர் கொல்லப்பட்டார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்திய ராணுவம் துப்புரவு மற்றும் தேடும் பணியில் ஈடுபட்டிருந்த போது பாகிஸ்தான் வீரர் ஒருவரின் உடல் பூஞ் மாவட்டத்தின் குல்புர் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. இவர் பாகிஸ்தான் எல்லையை கடந்து வந்திருப்பார் என நம்பப்படுகிறது. அவரிடமிருந்து வித்தியாசமான குத்துவாள் , கேமராவுடைய தலைமாட்டி , ஏகே துப்பாக்கி, மூன்று இதழ்கள், மற்றும் இரண்டு வெடிகுண்டுகள் போன்றவை உடன் இருந்துள்ளன.

இது பற்றி ராணுவ அதிகாரிகளிடம் கேட்ட போது, சரியாக மதியம் 2 மணிக்கு ஐந்திலிருந்து ஏழு பேர் எல்லை தாண்டி 600 மீட்டர் வந்ததாக கருதப்படுகிறது. அவர்கள் தங்கள் கேமராவில் இங்கு நடந்த தாக்குதலை பதிவு செய்துள்ளனர். அதிலிருந்து தாக்குதலை நேரடியாக பாகிஸ்தானிற்கு அனுப்பியிருக்கலாம் என நம்பப்படுகிறது. 

அவர்கள் இந்திய ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் இந்திய வீரர்கள் இருவர் கொல்லப்பட்டனர். இதற்காக இந்திய ராணுவம் நடத்திய எதிர் தாக்குதலில் இரு பாக்.வீரர்கள் கொல்லப்பட்டனர். அதில் ஒருவரின் உடலை மற்ற பாகிஸ்தான் வீரர்கள் எடுத்து சென்றிருக்கலாம் என நம்பப்படுகிறது. இத்தாக்குதல் 3.30 மணி வரை தொடர்ந்துள்ளது. இதில் இந்திய வீரர்களான நாய்க் ஜாதவ் சந்திப் (34 ),சிபாய் மென் சாவன் பால்க்(24 ) கொல்லப்பட்டனர்.

இது போன்ற தாக்குதல் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இதே போல் கடந்த வருடம் அக்டோபர் 28 ஆம் நாள் ஒரு இந்திய வீரர் கொல்லப்பட்டு எல்லைக்கு அருகில் போடப்பட்டார்.  2013 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் லென்ஸ் நாய்க் பாகிஸ்தானால் தலைதுண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 3 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து