பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ஒரு ஏமாற்றுக்காரர்: ராஷ்ட்ரீய ஜனதா தளம் தாக்கு

சனிக்கிழமை, 24 ஜூன் 2017      அரசியல்
Nitish Kumar 2017 05 15

பாட்னா, பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ஒரு ஏமாற்றுக்காரர் என்று ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சி தலைவர் பாய் விரேந்தர் பேச்சால் சர்ச்சை கிளம்பி உள்ளது.

முதலில் எதிர்க்கட்சிகள் சார்பாக ஜனாதிபதி வேட்பாளரை நிறுத்தவது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியாவுடன் பீகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதீஷ்குமார் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அவர் தனது நிலையை மாற்றிக்கொண்டு தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்துக்கு ஆதரவு அளித்துள்ளார்.

இதுகுறித்து ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் தலைவர் பாய் விரேந்தர் செய்தியார்களிடம் கூறியதாவது:-
மன்னிப்பு கிடையாது

பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் ஒரு ஏமாற்றுக்காரர். ஜனாதிபதி வேட்பாளர் மீரா குமாருக்கு  எதிராக வாக்களிக்கபோவதாக அவர் கூறியிருப்பது பெரிய தவறை செய்துள்ளார். அவர் எப்போதும் மக்களை முட்டாள் ஆக்குபவர். பீகார் மக்கள் நிதிஷ்குமாரை மன்னிக்க மாட்டார்கள். தற்போது பீகாரில் இருந்து ஒரு மகள் ஜனாதிபாதி வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். நிதிஷ் குமார் காத்திருந்து ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து