முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உள்ளாட்சி தனி அலுவலர்களின் பதவிக்காலம் 6 மாதம் நீட்டிப்பு - தமிழக சட்டசபையில் மசோதா நிறைவேற்றம்

சனிக்கிழமை, 24 ஜூன் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : உள்ளாட்சித்துறை தனி அலுவலர்களின் பதவிக்காலம், மேலும், 6 மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான மசோதா நேற்று தமிழக சட்டசபையில் தாகல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

தனி அதிகாரிகள்

2017-ம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சிய சட்டங்கள் சட்டமுன்வடிவத்தை அறிமுகம் செய்து சட்டசபையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-
உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான அனைத்து பணிகளும் முடிவடைந்து, 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29-ம் தேதி மாநில தேர்தல் ஆணையம் தேர்தல்அறிவிக்கையினை வெளியிட்டது. இந்த தேர்தல் அறிவிக்கை முறையாக வெளியிடப்படவில்லையென தெரிவித்து அதனை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும், 2016-ம் ஆண்டு அக்டோபர் 24-ம் தேதி அப்போதிருந்த உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக் காலம் முடிவடைய இருந்ததால், உள்ளாட்சி அமைப்புகளை நிர்வாகம் செய்வதற்கு தேர்தல் நடத்தப்படும் வரை தனி அலுவலர்களை நியமனம் செய்யவும் உத்தரவிட்டது.

நீட்டிப்பு

நீதிமன்ற உத்தரவின்படி, நியமனம் செய்யப்பட்ட தனிஅலுவலர்களின் பதவிக்காலம் 2016-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி முடிவடைய இருந்த நிலையில் வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி, பள்ளி மாணவர்களுக்கான பொதுத் தேர்வு போன்ற காரணங்களைக் குறிப்பிட்டு மாநில தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டதற்கிணங்க தனிஅலுவலர்களின் பதவிக் காலத்தை 2017-ம் ஆண்டு ஜூன்-30 வரை உரிய சட்ட திருத்தம் வாயிலாக நீட்டிப்பு செய்யப்பட்டது.

மீண்டும் நீட்டிப்பு

உள்ளாட்சி தேர்தலுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் வெளியிடும் பணி மற்றும் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மேல்முறையீட்டு வழக்குகள் மீதான தீர்ப்பின் அடிப்படையில் தேர்தல் நடத்தப்படவேண்டிய சூழ்நிலை ஆகிய காரணங்களால் 2017-ம் ஆண்டு ஜூன் 30-ம் தேதிக்கு பின்னர் தேர்தலை நடத்தி முடிக்க இயலாத நிலையைக் கருத்தில் கொண்டு தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை மேலும் 6 மாதகால அளவிற்கு நீட்டிக்க உரிய நடவடிக்க எடுக்குமாறு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அரசைக் கேட்டுக்கொண்டது. எனவே, 30.06.2017-ல் தனி அலுவலர்களின் பதவி காலம்முடிவடையும் நிலையில், உள்ளாட்சித் தேர்தல் நடத்தி முடிக்கப்படும் வரை அல்லது அதிகபட்சமாக வரும் டிசம்பர் மாதம் 31-ம் தேதி வரை தற்காலிக ஏற்பாடாக தனிஅலுவலர்களின் பதவிக் காலத்தை நீட்டிக்க முடிவு செய்து, இச்சட்ட முன்வடிவு கொண்டு வரப்படுவதாக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி விளக்கமளித்தார்.

நிறைவேற்றம்

இந்த சட்டமுன்வடிவுக்கு தி.மு.க, காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் ஆரம்ப நிலையிலேயே எதிர்ப்பு தெரிவித்தன. இதற்கான விவாதத்தில் திமுக சார்பில் ஆஸ்டினும், காங்கிரஸ் சார்பில் விஜயதரணியும் முஸ்லீம் லீக் சார்பில் அபுபக்கரும் பேசினர். முடிவில் குரல் வாக்கெடுப்பின் மூலம் சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.கவினர் வெளிநடப்பு செய்தனர். அவர்களை தொடர்ந்து காங்கிரஸ், முஸ்லீம் லீக் கட்சியினரும் அவையிலிருந்து வெளியேறினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 4 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து