முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறியரக செயற்கைக்கோளை உருவாக்கி சாதனை படைத்த மாணவர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசு: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு

சனிக்கிழமை, 24 ஜூன் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை, சிறியரக செயற்கைக்கோளை உருவாக்கி சாதனை படைத்த மாணவர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று நேற்று சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் விதி 110 ன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு விபரம் வருமாறு:-

மிகச் சிறிய செயற்கைக்கோளை உருவாக்கி சாதனை படைத்துள்ள மாணவர்கள் குழுவிற்க்கு ரூ 10 லட்சம் பரிசு வழங்கப்படும். - முதல்வர் எடப்பாடி பழனிசாமி

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியை சேர்ந்த 18 வயது இளைஞரான ரிஃபாத் சாருக் தலைமையிலான ஆறு மாணவர்கள் கொண்ட குழு உருவாக்கிய 64 கிராம் எடை கொண்ட மிகச் சிறிய செயற்கைக்கோள் சமீபத்தில், அமெரிக்காவில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான "நாசா" நடத்திய போட்டியில் கலந்து கொண்டு, உலகத்தின் 57 நாடுகளிலிருந்து சமர்ப்பிக்கப்பட்ட 80,000 மாதிரிகளில் முதல் பரிசு பெற்றது. இந்த செயற்கைக்கோள் கடந்த 22.6.2017 அன்று விண்ணில் "கலாம் சாட்" என்ற பெயரில் "நாசா" ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்டது. முப்பரிமாண அச்சுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இந்த
செயற்கைக்கோள் வானிலை, வான்வெளியில் உள்ள கதிர்வீச்சு, வெப்பம் ஆகியவற்றை ஆராயும் திறன் கொண்டது. சென்னையிலிருந்து செயல்படும் "ஸ்பேஸ்கிட்ஸ்"என்ற அமைப்பு இந்த மாணவர்களுக்கு ஆக்கமும், ஊக்கமும் அளித்து உதவியது. இந்த சாதனையினை நிகழ்த்திய மாணவர்கள் ரிஃபாத் சாருக், யக்னா சாய், வினய் பரத்வாஜ், தனிஷ்க் திவேதி, கோபிநாத் மற்றும் முகம்மது அப்துல் காசிப் ஆகியோருக்கும், குறிப்பாக அந்தக் குழுவின் தலைமை விஞ்ஞானியாக செயல்பட்ட ரிஃபாத் சாருக்கிற்கும் இந்த மன்றத்தின்  சார்பிலும், தமிழ்நாடு அரசின் சார்பிலும், எனது தனிப்பட்ட முறையிலும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சாதனையை படைத்து, இந்தியாவிற்கு, குறிப்பாக தமிழகத்திற்கு பெருமைத் தேடித் தந்த மாணவர் ரிஃபாத் சாருக் தலைமையிலான  மாணவர் குழுவினை மேலும் இதுபோன்ற பல சாதனைகளை செய்ய ஊக்கப்படுத்தும் விதமாக தமிழக அரசின் சார்பில் 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

முதல்வரின் இந்த அறிவிப்புக்குஅமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், தனது மாவட்டத்திற்கு உட்பட்ட  தொகுதியில் மாணவர்கள் படைத்த இந்த சாதனைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரூ 10 லட்சம் ஊக்கத்தொகை அளித்ததற்கு நன்றி தெரிவித்தார். இதே போல் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தனது தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டியில் செயற்கைக்கோளை உருவாக்கிய இளம்விஞ்ஞானிகளுக்கு வழங்கப்பட்ட பரிசுத்தொகைக்காக நன்றியும் வரவேற்பும் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து