முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய பிரதமர் மோடி- அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை - பல்வேறு துறைகளில் ஒப்பந்தம்

ஞாயிற்றுக்கிழமை, 25 ஜூன் 2017      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க அதிபர் டிரம்பும் இன்று வெள்ளை மாளிகையில் சந்தித்து பேசுகிறார்கள்.
பிரதமர் மோடி, சமீபத்தில் ஜெர்மனி,ஸ்வீடன், பிரான்ஸ், ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு சென்றுவந்தார். அதனையடுத்து தற்போது போர்ச்சுக்கல், அமெரிக்கா, டென்மார்க் ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். முதல்கட்டமாக அவர் போர்ச்சுக்கல் சென்றார். போர்ச்சுக்கல் பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று அமெரிக்க தலைநகர் வாஷிங்டன்னுக்கு சென்றார்.

வரவேற்பு:-

வாஷிங்டன்னில் உள்ள ஆன்ட்ரூ விமான நிலையத்தில் விமானத்தில் இருந்து தரையிறங்கிய பிரதரமர் மோடியை இந்திய தூதர் நவ்தேஜ் சர்னா மற்றும் அமெரிக்க அதிகாரிகள் வரவேற்றனர். விமான நிலையத்திற்கு வெளியே நின்றிந்த இந்தியர்கள், மோடியை வாழ்த்தி கோஷமிட்டனர். பின்னர் வாஷிங்டன்னில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் மோடி கலந்துகொண்டார். இந்திய தொழிலதிபர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அதனையடுத்து அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களையும் சந்தித்தார்.

விருந்து:-

இன்று வெள்ளைமாளிகையில் அதிபர் டொனால்டு டிரம்பை சந்தித்து பேசிகிறார். அப்போது மோடிக்கு இரவு விருந்தை டிரம்ப் அளிக்கிறார். அந்த விருந்திலும் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார். பிரதமர் மோடி- அதிபர் டிரம்பின் சந்திப்பின்போது இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவை மேலும் வலுப்படுத்துதல், தீவிரவாதத்தை கூட்டாக சேர்ந்து ஒழிப்பது மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்து பேசுகிறார்கள். மேலும் ராணுவ ஒத்துழைப்பு, எரிசக்தி சம்பந்தமான விஷயங்கள் குறித்தும் இருவரும் விவாதிக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் மின்சார தேவையை கருத்தில் கொண்டு அணு உலை அமைப்பது தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடக்கலாம். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் தீவிரவாத்தை தூண்டிவிடுதல்,சீனா-பாகிஸ்தான் இடையே நெருங்கி வரும் உறவு, சீனாவின் சில்க் சாலை அமைக்கும் விவகாரம், தென் சீனா கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கம், இந்துமகா சமுத்திர பகுதியில் சீன நடவடிக்கைகள் அதிகரிப்பு ஆகிய விஷயங்கள் குறித்தும் இரண்டு தலைவர்களும் விரிவான முறையில் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று தெரிகிறது.
பிரதமர் மோடி, இன்று அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு இரவே டென்மார்க் புறப்பட்டு செல்கிறார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து