முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

1975-ல் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட கறுப்பு தின இரவை மறக்க முடியாது - பிரதமர் நரேந்திரமோடி வானொலி உரை

ஞாயிற்றுக்கிழமை, 25 ஜூன் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : கடந்த 1975-ம் ஆண்டு நாட்டில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டதை நினைகூர்ந்த பிரதமர் மோடி, அது கறுப்பு தின இரவு என்று கூறினார்.

கடந்த 1975-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி நாட்டில் அவசர நிலையை பிரகடனம் செய்தார். இதை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. சுதந்திர போராட்ட தலைவர் ஜெயபிரகாஷ் நாராயணன் தலைமையில் போராட்டம் நடந்தது. இதனால் அடுத்து நடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது.

பிரதமர் உரை:-

இந்திரா காந்தியால் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டதையும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகளையும் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தனது வாராந்திர வானொலி உரையில் கூறினார். பிரதமர் மோடி மாதந்தோறும்  கடைசி ஞாயிற்றுக்கிழமையில்  மான் கி பாத் என்ற( மக்களின் குரல்) தலைப்பில் வானொலியில் பேசி வருகிறார். நேற்று இந்த மாதத்தின் கடைசி  ஞாயிற்றுக்கிழமையாகையால் வானொலியில் அவரது உரை ஒலிபரப்பப்பட்டது. அதில் கடந்த அவசர நிலை பிரகடனத்தால் ஏற்பட்ட பாதிப்பை நினைவு கூர்ந்த மோடி, ஜனநாயகத்தை பாதுகாப்பதில் மிகவும்  விழிப்புடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். நாட்டில் ஜனநாயகத்தை பாதுகாக்க போராடிய தலைவர்களையும் மோடி நினைவுபடுத்தினார். ஜனநாயக ஆதரவு பாரம்பரியத்தை நாம் வலுப்படுத்த வேண்டும் என்றும் மோடி கேட்டுக்கொண்டார்.

சிறையாக மாறிய இந்தியா:-

ஜனநாயகமானது ஒரு அமைப்பு அல்ல. அது நமது கலாச்சாரமாகும். ஜனநாயகத்தை விரும்புபவர்கள் அவசரநிலை கொடுமைகளை மறக்கமாட்டார்கள். அவசரநிலை காலத்தில் இந்தியாவே சிறையாக மாறியது. அவசரநிலை பிரகடனத்தை எதிர்த்தவர்கள் அடக்கப்பட்டார்கள். ஜெயபிரகாஷ் நாராயணன், வாஜ்பாய்  உள்பட பல முக்கிய தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். அவசரநிலை பிரகடனத்தால் நீதித்துறையும் பாதிப்புக்குள்ளானது என்றும் மோடி தனது உரையில் மேலும் கூறினார்.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து