குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டத்தின் கீழ் 25 விவசாயிகளுக்கு இடுபொருட்கள் கலெக்டர் டி.பி.ராஜேஷ் வழங்கினார்

ஞாயிற்றுக்கிழமை, 25 ஜூன் 2017      கடலூர்
cud collector

கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் கொத்தட்டையில் வேளாண்மைத்துறை சார்பில் குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டத்தின் கீழ் 25 விவசாயிகளுக்கு இடுபொருட்களை கலெக்டர் டி.பி.ராஜேஷ்  வழங்கினார். இவ்விழாவில் கலெக்டர் டி.பி.ராஜேஷ் தெரிவித்ததாவது,

 இடுபொருட்கள் வழங்கும் விழா

தமிழ்நாடு முதலமைச்சர்  டெல்டா பாசன விவசாயிகளுக்கான குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டம்-2017யினை அறிவித்துள்ளார்கள். இத்திட்டத்தின் கீழ் நெல் மற்றும் பயறுவகை சாகுபடிக்கான இடுபொருட்கள் வழங்கும் விழா பரங்கிப்பேட்டை வட்டாரம் கொத்தட்டை கிராமத்தில் நடைபெறுகிறது.நடப்பாண்டில் குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகள் நலனை பாதுகாத்திடவும், தற்போதுள்ள நீர் ஆதாரங்களைக் கொண்டு நெல் சாகுபடி செய்திடவும் நிலத்தடி நீரை சிக்கனமாக பயன்படுத்தி நெற்பயிருக்கு மாற்றாக பயறுவகை சாகுபடியினை ஊக்குவித்திடவும்  தமிழ்நாடு முதலமைச்சர்  குறுவை சாகுபடி தொகுப்பு திட்டத்தினை அறிவித்துள்ளார்கள். இத்திட்டம் கடலூர் மாவட்டத்தில் காவேரி டெல்டா பகுதியில் உள்ள பரங்கிப்பேட்டை, புவனகிரி, கீரப்பாளையம், குமராட்சி மற்றும் காட்டுமன்னார்கோயில் ஆகிய 5 வட்டாரங்களில் செயல்படுத்தப்படும்.                இத்திட்டத்தின் கீழ் 12 மணி நேர தடையில்லா மும்முணை மின்சாரம், தற்போதுள்ள நீர் ஆதாரங்களைக்கொண்டு நெல்-10,400 ஏக்கரிலும், பயறுவகை பயிர்கள் 9600 ஏக்கரிலும், சாகுபடி மேற்கொள்ளப்படும். உழவு பணிகளுக்காக ஏக்கர் ஒன்றுக்கு ரூ.500 வீதம் ரூ.5,000. ஏக்கருக்கு உதவி தொகை வழங்கப்படும். நீர்பாசன குழாய்கள், 30 எண்கள் கொண்ட ஒரு யூனிட்டுக்கு ரூ.21,000. பின்னேற்பு மானியத்தில் 100 விவசாயிகளுக்கு வழங்கப்படும். இயந்திர நடவு முறையினை ஊக்குவித்திடும் வகையில் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.4000 வீதம் 2000 ஏக்கருக்கு உதவி தொகை வழங்கப்படும். நெற்பயிருக்கான சிங்சல்பேட் ஏக்கர் ஒன்றுக்கு 10 கிலோ, திரவ உயிர் உரங்கள் ஏக்கருக்கு 400 மிலி, நெல்நுண்ணூட்டக்கலவை ஏக்கருக்கு 5 கிலோ 100 சதவீத மானியத்தில் வேளாண்மை விரிவாக்க மையங்களில் வழங்கப்படும். பயறுவகை சாகுபடியினை ஊக்குவித்திடும் விதமாக உளுந்து மற்றும் பச்சைப் பயறு விதைகள் ஏக்கருக்கு 8 கிலோ, இலைவழி தெளிப்புக்கான டிஏபி உரம் ஏக்கருக்கு 10 கிலோ, திரவ உயிர் உரங்கள் ஏக்கருக்கு 400 மிலி ஆகியன 100 சதவீத மானியத்தில் வேளாண்மை விரிவாக்க மையங்களில் வழங்கப்படும்.            கடலூர் மாவட்டத்தில் ரூ.234.35 லட்சத்தில் செயல்படுத்தப்படும் குறுவை சாகுபடி தொகுப்பு திட்டத்தினை விவசாயிகள் முழுமையாக பயன்படுத்தி நெல் மற்றும் பயறு வகை சாகுபடி செய்து பயன்பெற வேண்டுமென கேட்டுக்கொண்டார்.               இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் உழவு பணிகள், பயறுவகை விதைப்பு பணி மற்றும் செயல்விளக்கங்களையும் கலெக்டர்  பார்வையிட்டார்.

பலர் பங்கேற்பு

இந்நிகழ்ச்சியில் கடலூர் வேளாண்மை இணை இயக்குநர் கே.கே.சேனாபதி, வேளாண்மை துணை இயக்குநர்கள் என்.கனகசபை, ஆர்.சம்பத்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவ) கிருபாகரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வை.ரவிச்சந்திரன், வேளாண்மை உதவி இயக்குநர்கள் ஆர்.விஜயராகவன், எஸ்.இளவரசன், வேளாண்மை அலுவலர் சித.உண்ணாமலை, முன்னோடி விவசாயி கனகராஜ் உள்ளிட்ட விவசாயிகள் திரளாக கலந்துகொண்டனர்.

மதுரை ரிங்ரோட்டுக்காக இருபோக சாகுபடி நிலங்களை அழிக்கத் துடிக்கும் தேசிய நெடுஞ்சாலைத் துறை

Aval Ladoo Recipes in Tamil | அவல் லட்டு | Sweets Recipe in Tamil

Star Hotel Chicken Shami Kabab Recipe in Tamil | சிக்கன் ஷாமி கபாப் | Chicken Recipes

Star Hotel Coriander Chicken Recipe in Tamil| | கொத்தமல்லி சிக்கன்| Kothamalli Chicken | Chicken Recipe

Fish Manchurian recipe in Tami l மீன் மஞ்சுரியன் l How to make fish manchrian in Tamil|Fish Recipes

Madurai Special Kari Dosa Recipe in Tamil | மதுரை மட்டன் கறி தோசை | Mutton Kari Dosa | Keema Dosa

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து